குறைக்கப்படும் அரச பிரமுகர்களின் வரப்பிரசாதங்கள்.. அமைச்சர் வெளியிட்ட தகவல்
தற்போதைய ஆட்சியில், ஆட்சியாளர்களின் வரப்பிரசாதங்கள் குறைக்கப்பட்டு மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகின்றன என்று அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலம் குறிப்பிடுகையில், "அடுத்த அரசாங்கம் என்பதும் இந்த அரசாங்கமே தான். மக்கள் மத்தியில் இந்த அரசாங்கத்திற்கு 65வீத ஆதரவு இருப்பதாக சர்வதேச அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
மேலும், ஊழலற்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை ஒரே ஆண்டில் 14 இடங்கள் முன்னேறியுள்ளது.
வேதன அதிகரிப்பு
தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அரச ஊழியர்களுக்கான இந்த வேதன அதிகரிப்பு உடன்படிக்கை 3 ஆண்டுகளுக்கு எட்டப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதார மாற்றங்கள் மற்றும் பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் இது மேலும் அதிகரிக்கப்படலாம் என்பதால் 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் செய்யப்படவில்லை.
அவ்வாறு நீண்ட காலத்திற்குச் செய்வது தொழிலாளர்களுக்குப் பாதகமாக அமையும். 2026ஆம் ஆண்டிற்காக இந்த வேதன அதிகரிப்பிற்கென 5000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
நிலவும் சீரற்ற காலநிலை: மகாவலி ஆற்றின் நீர்மட்டம் உயர்வு - மூடப்பட்டுள்ள வீதி குறித்து வெளியான தகவல்
நிதி ஒதுக்கீடு
ஒவ்வொரு ஆண்டும் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ஜீவன் தொண்டமான், இராதாகிருஷ்ணன், திகம்பரம் மற்றும் மனோ கணேசன் போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த முயற்சிக்குத் தமது ஆதரவை வழங்கியுள்ளனர்.

கடந்த காலங்களில் ஆட்சியாளர்கள் அதிக வரப்பிரசாதங்களைப் பெற்றனர். ஆனால், இப்போது அவை குறைக்கப்பட்டு மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படுகின்றன.
உதாரணமாக, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது. இது ஒரு மக்கள் நலன் சார்ந்த ஆட்சியாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
உலக நாடுகள் மீது டிரம்ப் விதித்த வரி விதிப்பு ரத்து: அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு News Lankasri