கொழும்பில் பிரபல உணவக உரிமையாளரின் கொடூர செயல்
இலங்கையில் மிகவும் பிரபல உணவக உரிமையாளர் விராஜ் விக்ரமநாயக்கவை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் தனது உணவக ஊழியர் ஒருவரை தாக்கும் காணொலி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அந்த காணொலியில், ஊழியர் ஒருவரை மிகவும் கொடூரமான முறையிலும், அவமதிக்கும் வகையில் நடத்தும் விதம் மிக தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.
பொலிஸ் நிலையத்தினால் விசாரணை
விற்பனை இலக்குகளை எந்தவொரு ஊழியரும் எட்டவில்லை என உணவகத்தின் பிரதானி விராஜ் விக்ரமநாயக்க, குறித்த ஊழியரை தாக்கியுள்ளார்.

மேலும் ஊழியர்களை, அநாகரீகமான வார்த்தைகளால் திட்டிய காட்சி அந்த காணொளியில் பதிவாகியுள்ளது.
தற்போது சமூக வலைத்தளங்கள் ஊடாக பலரும் தங்களது பதிவுகளை இட்டு, அவருக்கு எதிராக கடுமையான விமர்சனங்களையும் எதிர்ப்பையும் வெளியிட்டு வருகின்றனர்.
சம்பவம் தொடர்பாக மஹரகம பொலிஸ் நிலையத்தினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பஹ்ரைன் நாட்டின் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: மத்திய கிழக்கில் மீண்டும் அதிகரிக்கும் பதற்றம் News Lankasri
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam