நிலவும் சீரற்ற காலநிலை: மகாவலி ஆற்றின் நீர்மட்டம் உயர்வு - மூடப்பட்டுள்ள வீதி குறித்து வெளியான தகவல்
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மகாவலி ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக தெரியவருகிறது.
இதன் காரணமாக சுங்காவில, லங்காபுரவிலிருந்து சோமாவதிய வரையிலான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, இன்று காலை 09:15 முதல் இலகுரக வாகனப் போக்குவரத்திற்கு இந்த வீதி மூடப்படும் என பொலன்னறுவை அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
உலக நாடுகளுக்கு அடுத்த அதிர்ச்சி : உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து அதிரடியாக ட்ரம்ப் விதித்த கூடுதல் வரி
முதலாம் இணைப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு மண்சரிவு ஆரம்பக்கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தின் நில்தண்டாஹின்ன மற்றும் வலப்பனை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதலாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நுவரெலியா மாவட்டத்தின் மதுரட்ட, ஹங்குரன்கெத்த மற்றும் பதுளை மாவட்டத்தின் மீகஹகிவுல, கந்தகெட்டிய ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளையும் விழிப்புடன் இருக்குமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று (21) முற்பகல் 08 மணி முதல் நாளை (22) முற்பகல் 08 மணி வரை நடைமுறையில் இருக்கும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வானிலை நிலவரம்
இதேவேளை காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் முல்லைத்தீவிலிருந்து காங்கேசந்துறை மற்றும் புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு முதல் வடக்கு வரையான திசைகளிலிருந்து வீசக் கூடும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் News Lankasri