பாண் உற்பத்தி என்ற போர்வையில் மதனமோதகம் விற்பனை: பொலிஸார் நடவடிக்கை
சட்டவிரோத கஞ்சா கலந்த மதனமோதகம் தொகை ஒன்றை விற்பனைக்காக வைத்திருந்த நபர் ஒருவர் நோட்டன் பிரிட்ஜ் பொலிஸாரால் இன்று(16) கைது செய்யப்பட்டுள்ளார்.
வெதுப்பக உற்பத்திகள் விற்பனை என்ற போர்வையில் குறித்த நபர், கஞ்சா கலந்த மதனமோதக போதைப்பொருளை விற்பனை செய்து வந்துள்ளார்.
56 வயது நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் நடவடிக்கை
லொறியொன்றில் வெதுப்பக உற்பத்தி பொருள் விற்பனை என்ற போர்வையில் கஞ்சா கலந்த மதனமோதக போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக புலனாய்வு பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதற்கமைய, நோட்டன் பிரிட்ஜ் ஊடாக குறித்த லொறி ஹட்டன் நோக்கி பயணித்துக்கொண்டிருக்கையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் இருந்து 250 மதனமோதக பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சந்தேக நபரை விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan
