தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள ஐக்கிய தேசியக் கட்சி
இலங்கையின் ஜனநாயகப் பல கட்சி முறைமையைப் பாதுகாப்பதற்காக அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒரே மேடைக்குக் கொண்டு வருவதே ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடாகும்.
பல கட்சி முறைமையைப் பாதுகாக்கும் போது அரசியல் கட்சிகளின் தனித்துவம் மற்றும் கொள்கைகளை பாதுகாக்கும் வகையில் செயற்படுவது முக்கியமாகும்.
அனைத்து கட்சிகளிடம் கோரிக்கை
இந்த நிலைப்பாட்டுக்கு வருமாறு அனைத்துக் கட்சிகளையும் தாம் கோருவதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
அதேபோன்று, குறித்த இலக்கை அடைவதற்காக ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்து, ஒற்றுமையுடன் செயற்படுவதற்காகவும் தாம் உறுதிபூண்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி கூறியுள்ளது.
பேச்சுவார்த்தை
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில், எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளில் தாம் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ள அந்தக் கட்சி, ஏனைய அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஆட்டத்திற்கு என்ட் கார்ட் போட்ட மக்கள்.. இந்த வாரம் வெளியேறும் சின்னத்திரை பிரபலம் யார் தெரியுமா? Manithan

15 வயதில் வீட்டின் அறையில் அடைத்த பெற்றோர்! 27 ஆண்டுகளுக்கு பின் 47 வயதில் பெண் மீட்பு News Lankasri
