இஷாரா செவ்வந்தி மீதான விசாரணைகள் தொடர்பில் வெளியான தகவல்
நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட இஷாரா செவ்வந்தி உட்பட ஆறு சந்தேகநபர்களிடம் மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணை நடத்தி வருகின்றன.
கொழும்பு நீதிமன்றத்தில் இடம்பெற்ற கணேமுல்ல சஞ்சீவ கொலை விவகாரம் தொடர்பில் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி, நேபாளத்தில் கைது செய்யப்பட்டு நேற்றையதினம்(15.10.2025) இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.
இந்நிலையில், அவர் உட்பட 6 பேர் மீது மூன்று குழுக்களை கொண்ட பொலிஸ் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
6 சந்தேகநபர்கள்
இஷாரா செவ்வந்தி வீரசிங்க பின்புர தேவகே (26), கிளிநொச்சி- பளையை சேர்ந்த ஜீவதாசன் கனகராசா - சுரேஸ் (33), யாழ்ப்பாணம் மிருசுவிலை சேர்ந்த தக்சி நந்தகுமார் (23), தினேஷ் ஷ்யாமந்த டி சில்வா (49), யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கெனடி பஸ்தியாம்பிள்ளை- ஜே.கே.பாய் (35) மற்றும் தினேஷ் நிசாந்த குமார விக்ரம ஆராச்சிகே (43) ஆகிய 6 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

இதில் இஷாரா செவ்வந்தி, உள்ளிட்ட நால்வர் கொழும்பு குற்ற விசாரணைப்பிரிவிலும் ஏனைய இருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பேலியகொட பிரிவிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பறப்பதற்கு பாதுகாப்பற்ற 6,000 விமானங்கள்... ஸ்தம்பிக்கும் பிரித்தானிய விமான நிலையங்கள் News Lankasri