இலங்கையில் கட்டாய நடைமுறை - மீறினால் ஏற்படவுள்ள விளைவு
இலங்கையில் அதிவேகப் பாதைகளில் ஆசனப்பட்டி அணியாமல் வாகனம் செலுத்துவர்கள் மற்றும் பயணம் செய்பவர்கள் என அனைவருக்கும் எதிராக தண்டப்பணம் விதிக்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு பிரிவுக்கு பொறுப்பான துணை பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே.சேனாதிர கூறுகையில்,
இத்தகைய வாகன ஓட்டுநர்களில் 18 பேருக்கு நேற்றைய தினம் தண்டப்பணம் விதிக்கப்பட்டது.
ஆசனப்பட்டி அணிவது கட்டாயம்
இனிமேல் ஆசனப்பட்டி அணியாமல் அதிவேகப் பாதைகளுக்குள் வாகனங்களை அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதிவேகப் பாதைகளில் செல்லும் வாகனங்கள் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டிருந்தாலும், தற்போது தண்டப்பணம் விதிப்பு கடுமையாக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |