நாட்டின் பல பகுதிகளில் மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்
இலங்கையின் முக்கிய நகரங்களில் காற்றின் தரம் கடந்த 24 மணிநேரத்தில் பெரும்பாலும் மிதமான மட்டத்திலேயே காணப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், எதிர்வரும் நாட்களில் சில பகுதிகளில் காற்றின் தரம் மோசமடையக்கூடும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்று வெளியிடப்பட்ட சுற்றுப்புற காற்றின் தர அறிவிப்பின்படி, பெரும்பாலான நகர்ப்புறங்களில் நுண் துகள்களின் (PM2.5) அளவு மிதமான மட்டத்தில் இருந்தது.
காற்றின் தரம்
அதேவேளை வவுனியா, நுவரெலியா, எம்பிலிபிட்டிய, திருகோணமலை, முல்லைத்தீவு, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் சீரான நிலையில் பதிவாகியுள்ளது.
இருப்பினும், அடுத்த 24 மணிநேரத்திற்கான முன்னறிவிப்பின்படி, யாழ்ப்பாணம் மற்றும் புத்தளம் உள்ளிட்ட பல நகரங்களில் காற்றின் தரம் மிதமான மற்றும் சற்று ஆரோக்கியமற்ற நிலையில் இருக்கக்கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எல்லை தாண்டிய காற்று மாசு காரணமாக, வடக்குப் பகுதியிலிருந்து வீசும் மாசடைந்த காற்றினால் அடுத்த இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு நாடு முழுவதும் காற்றின் தரம் சற்று ஆரோக்கியமற்ற நிலைக்குத் தள்ளப்படலாம் என்று தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.
வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
இதன் காரணமாக, பொதுமக்கள் இயன்றவரை முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதுடன், சுவாசப் பாதிப்பு உள்ளவர்கள் அல்லது உடல்நலக் குறைபாடு உள்ளவர்கள் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டால் மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 22 மணி நேரம் முன்
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
குணசேகரன் பினானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri