வெளிநாட்டு நாணயங்கள் பலவற்றிற்கு எதிராக தொடர்ந்து உயரும் இலங்கை ரூபா
கடந்த புதன் கிழமையுடன்(24) ஒப்பிடும் போது இன்றையதினம்(26.01.2024) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வடைந்துள்ளது.
இன்றைய நாணய மாற்று விகிதம்
இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (26.01.2024) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 323.17 ரூபாவாகவும், கொள்வனவு விலை 313.17 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 241.30 ரூபாவாகவும், கொள்வனவு விலை 230.78 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 352.03 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 338.04 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 412.29 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 396.57 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
வெளிநாட்டு நாணயங்கள் பலவற்றிற்கு எதிராக இன்றையதினம் இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வடைந்துள்ளது.

சென்னையில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள பவதாரணியின் உடல் : ஒன்று திரளும் திரைப் பிரபலங்கள்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

ட்ரம்பிற்கு கெட்ட செய்தி., அமெரிக்காவின் Patriot ஏவுகணைகளை தகர்த்தெறியும் ரஷ்யாவின் S-400 News Lankasri
