சகோதரி பவதாரணியின் உடலைப்பார்க்க கொழும்பிற்கு வந்த யுவன்
இசைஞானி இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரணி இலங்கையில் நேற்று திடீரென உயிரிழந்த நிலையில், அவரது சகோதரரும் இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட குழுவினர் இன்று காலை இலங்கைக்கு வருகைத் தந்தனர்.
தற்போது பாடகி பவதாரணியின் உடல் வைக்கப்பட்டுள்ள கொழும்பில் உள்ள மலர்சாலைக்கு அவர் வருகைத் தந்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
திடீர் மரணம்
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பாடகி பவதாரணி கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி நேற்றையதினம் மாலை திடீரென உயிரிழந்தார்.

இந்த நிலையில், இசை நிகழ்ச்சிக்காக இலங்கைக்கு வருகைத் தந்திருந்த இசைஞானி இளையராஜா உடனடியாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு விரைந்ததுடன், அதன் பின்னர் பவதாரணியின் உடல் கொழும்பில் உள்ள மலர் சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
மேலும், இசைஞானி இளையராஜாவின் மகனும் இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட குடும்பத்தினர் தற்போது கொழும்பு நோக்கி வருகைத் தந்துள்ளனர்.






உலகுக்கு விடை கொடுத்த ராஜா வீட்டுக் குயில் : இலங்கை வைத்தியசாலையில் பிரிந்த உயிர் - சோகத்தில் இரசிகர்கள்
சென்னையில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள பவதாரணியின் உடல் : ஒன்று திரளும் திரைப் பிரபலங்கள்



உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 11 மணி நேரம் முன்
திட்றவனுக்கும் காசு : திட்டு வாங்குறவனுக்கும் காசு.. பிக்பாஸ் இது தான்! நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan
ஜனநாயகன் படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ் ரிப்போர்ட்.. ரிலீஸுக்கு முன் இவ்வளவு கோடி லாபமா Cineulagam
தொடக்க வீரராக 8, பந்துவீச்சில் 54 ஓட்டங்கள் கொடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: நொறுக்கிய ஆஞ்சநேயா News Lankasri
ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட கம்ருதீன், மகாநதி சீரியலில் இருந்து நீக்கம்? அதிர்ச்சி தகவல் Cineulagam