அதிரடியாக களமிறங்கிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் - ஈரானிய தாக்குதல்களுக்கு பதிலடி கொடுப்பதாக அறிவிப்பு
ஈரானிய தாக்குதல்களுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வான் பாதுகாப்பு படைகள் பதிலடி கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஈரானில் இருந்து வரும் ஏவுகணை மற்றும் ட்ரோன் அச்சுறுத்தல்களுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வான் பாதுகாப்பு படைகள் பதிலடி கொடுத்து வருவதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
வான் பாதுகாப்பு அமைப்புகள்
இது தொடர்பில் வெளியான அறிக்கையில், "நாட்டின் சிதறிய பகுதிகளில் கேட்கப்படும் சத்தங்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள் பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறிப்பதாலும், போர் விமானங்கள் ட்ரோன்கள் மற்றும் சுற்றித் திரியும் வெடிமருந்துகளை இடைமறிப்பதாலும் ஏற்பட்டவை" என்று அமைச்சகம் மேலும் கூறுகிறது.

இன்று இதுவரை ஆறு ஈரானிய ஏவுகணைகள் மற்றும் 131 ட்ரோன்களை இடைமறித்ததாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கூறிய சிறிது நேரத்திலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ஒரு ஏவுகணை மற்றும் ஆறு ட்ரோன்கள் குறித்த பிரதேசத்தில் தரையிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை அறியும் பாண்டியன் குடும்பம்.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புரோமோ Cineulagam
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri
விவாகரத்து வழக்கில் ட்விஸ்ட்.. கண்கலங்கி அழுத ரோகிணி.. அதிர்ச்சியில் மனோஜ், விஜயா! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam