ஈரானிய புலானாய்வு பிரிவுகளை வேரறுக்கும் இஸ்ரேல் - ஏவப்பட்ட 5000 குண்டுகள் - IDF இன் மிரள வைக்கும் தகவல்

Benjamin Netanyahu Israel Iran Middle East Trump tariff
By Sajithra Mar 05, 2026 03:17 PM GMT
Report

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் குறைந்தது மேலும் 1 முதல் 2 வாரங்கள் வரை தொடரும் என இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இந்த நடவடிக்கையின் முக்கிய இலக்கு ஈரானின் ஆட்சிக் கட்டமைப்பையும் இராணுவ திறனையும் முறையாக பலவீனப்படுத்துவது தான் என இஸ்ரேல் தெரிவித்து வருகின்றது. 

இஸ்ரேல் வான்படையின் தகவலின்படி, இந்த மோதல் தொடங்கியதிலிருந்து ஈரானில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 5000க்கும் அதிகமான குண்டுகள் வீசப்பட்டுள்ளன.

மேலும், தெஹ்ரான் பகுதிக்கு முக்கிய கவனம் செலுத்தி ஈரானின் வான்வழி கட்டுப்பாட்டை அதிகரிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன என்று இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்குள் திட்டமின்றி நுழைந்த இரண்டாவது ஈரானிய கப்பல்! ஏற்பட்டுள்ள பெரும் பதற்றம்

இலங்கைக்குள் திட்டமின்றி நுழைந்த இரண்டாவது ஈரானிய கப்பல்! ஏற்பட்டுள்ள பெரும் பதற்றம்

துல்லியமான ஆயுதங்கள் 

இஸ்ரேல் வான்படையின் மூத்த அதிகாரி ஒருவர், கடந்த இரண்டு நாட்களில் ஆயிரக்கணக்கான ஈரானிய இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

ஈரானிய புலானாய்வு பிரிவுகளை வேரறுக்கும் இஸ்ரேல் - ஏவப்பட்ட 5000 குண்டுகள் - IDF இன் மிரள வைக்கும் தகவல் | Idf Planning 1 2 Weeks Iran Ops Over 5 000 Bombs

ரமாத் டேவிட் வான்படை தளத்தின் தளபதி கர்னல் “அலெஃப்” வெளியிட்ட காணொளியில், கிழக்கு தெஹ்ரானில் உள்ள பெரிய இராணுவ வளாகம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் தாம் பங்கேற்றதாக தெரிவித்துள்ளார்.

குண்டுகளை வீசுவதற்கு சில விநாடிகள் முன் சுற்றி பார்த்தேன். என்னைச் சுற்றி டஜன் கணக்கான போர் விமானங்கள் பறந்துகொண்டிருந்தன. அவை துல்லியமான ஆயுதங்களை பயன்படுத்தி இலக்குகளை அழித்தன என அவர் கூறியுள்ளார்.

நேற்று மாத்திரம், தெஹ்ரானில் உள்ள பெரிய இராணுவ வளாகத்தை இலக்காகக் கொண்டு 100க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதாகவும், 250க்கும் அதிகமான குண்டுகள் வீசப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்பில் 11 மணி நேரத்தின் பின்னர் குறிவைக்கப்பட்ட ஈரான் கப்பல்! வெடித்து சிதற வைத்த அமெரிக்கா

இலங்கை கடற்பரப்பில் 11 மணி நேரத்தின் பின்னர் குறிவைக்கப்பட்ட ஈரான் கப்பல்! வெடித்து சிதற வைத்த அமெரிக்கா

ஈரானிய புலனாய்வுகள் 

இந்த வளாகத்தில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகரக் காவல்படை (IRGC), குத்ஸ் படை, உளவுத்துறை, பஸிஜ் துணை இராணுவப் படை, சைபர் பிரிவு, உள்நாட்டு பாதுகாப்புப் படையின் சிறப்பு அலகுகள் உள்ளிட்ட பல அமைப்புகளின் தலைமையகங்கள் இருந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ஈரானிய புலானாய்வு பிரிவுகளை வேரறுக்கும் இஸ்ரேல் - ஏவப்பட்ட 5000 குண்டுகள் - IDF இன் மிரள வைக்கும் தகவல் | Idf Planning 1 2 Weeks Iran Ops Over 5 000 Bombs

மேலும், மேற்குப் பகுதியான கெர்மான்ஷா பகுதியில் இருந்த ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை ஏவுதளம் இஸ்ரேலின் F-35I போர் விமானம் மூலம் அழிக்கப்பட்டதாகவும் இஸ்ரேலிய இராணுவத்தால் தெரிவிக்கப்படுகின்றது.

அதேபோல், மத்திய மற்றும் மேற்குப் பகுதிகளில் நடத்தப்பட்ட வான்தாக்குதல்களில் பல பாலிஸ்டிக் ஏவுகணை ஏவுதளங்களும் வான்பாதுகாப்பு அமைப்புகளும் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெஹ்ரானில் உள்ள மேஹ்ராபாத் விமான நிலையத்தின் வான்பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்புகளும் தாக்குதலில் சேதமடைந்ததாக கூறப்பட்டுள்ளது.

தாக்குதல்களில், 300 ஈரானிய பாலிஸ்டிக் ஏவுகணை ஏவுகணைகளை வீழ்த்தியதாக இஸ்ரேலிய இராணுவம் இன்று அறிவித்தது. 

பதற்றத்திற்கு மத்தியில் இஸ்ரேல் விமான சேவை ஆரம்பம்: ஈரானிய 300 ஏவுகணை செலுத்திகள் அழிக்கப்பட்டதாம்..

பதற்றத்திற்கு மத்தியில் இஸ்ரேல் விமான சேவை ஆரம்பம்: ஈரானிய 300 ஏவுகணை செலுத்திகள் அழிக்கப்பட்டதாம்..

சுட்டு வீழ்த்தப்பட்டுள்ள பாலிஸ்டிக்கள் 

அண்மைய புதுப்பிப்பில், போரின் போது ஈரானில் 300க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளை இஸ்ரேலிய விமானப்படை தாக்கி முடக்கியதாக இஸ்ரேலிய இராணுவம் கூறுகிறது.

ஈரானிய புலானாய்வு பிரிவுகளை வேரறுக்கும் இஸ்ரேல் - ஏவப்பட்ட 5000 குண்டுகள் - IDF இன் மிரள வைக்கும் தகவல் | Idf Planning 1 2 Weeks Iran Ops Over 5 000 Bombs

இஸ்ரேலிய பிரதேசத்தில் ஈரானின் துப்பாக்கிச் சூடு திறனைக் குறைப்பதற்காக மேற்கு ஈரானில் உள்ள ஏவுகணைகளில் குறிப்பாக கவனம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

ஈரான் - அமெரிக்க - இஸ்ரேல் மோதல் தொடங்கியதிலிருந்து தெஹ்ரானில் குறைந்தது 11 கட்டங்களாக தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இதற்கிடையில், இந்த போரில் இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து கூட்டு தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. புவியியல் பகுதிகள் மற்றும் இலக்குகளின் அடிப்படையில் இரு நாடுகளும் தாக்குதல்களைப் பகிர்ந்து மேற்கொள்கின்றன.

ஈரானிய புலானாய்வு பிரிவுகளை வேரறுக்கும் இஸ்ரேல் - ஏவப்பட்ட 5000 குண்டுகள் - IDF இன் மிரள வைக்கும் தகவல் | Idf Planning 1 2 Weeks Iran Ops Over 5 000 Bombs

மத்திய ஈரானில் உள்ள ஏவுகணை தளங்களை இஸ்ரேல் தாக்கி வரும் நிலையில், தெற்கு ஈரானில் உள்ள ஏவுகணை தளங்களை அமெரிக்க படைகள் இலக்காகக் கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றன.

மேலும் இஸ்ரேல் வான்படை அமெரிக்காவின் வான்வழி எரிபொருள் நிரப்பு திறன்களையும் அதிகமாக பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இஸ்ரேல் இராணுவ அதிகாரிகள் இதனை இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்தும் முதல் முழுமையான கூட்டு போர் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

அதேவேளை இந்த மோதலில் இஸ்ரேல் வான்படையின் சிறப்பு படைகள் அசாதாரணமான இரகசிய நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றன என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய கிழக்கு போர் பதற்றம்: பலியாகும் சாதாரண மக்கள் குறித்து நாமல் முன்வைத்துள்ள கோரிக்கை

மத்திய கிழக்கு போர் பதற்றம்: பலியாகும் சாதாரண மக்கள் குறித்து நாமல் முன்வைத்துள்ள கோரிக்கை

மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, அராலி தெற்கு

30 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US