மத்திய கிழக்கு போர் பதற்றம்: பலியாகும் சாதாரண மக்கள் குறித்து நாமல் முன்வைத்துள்ள கோரிக்கை
மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலில், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குச் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் முன்வர வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ 'எக்ஸ்' சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, "அண்மைய நாள்களாக மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் கட்டடங்கள், வணிக வளாகங்கள் மற்றும் ஹோட்டல்களைக் குறிவைத்து நடத்தப்படும் ஏவுகணைத் தாக்குதல்களால் பொதுமக்களின் உயிரிழப்புகள் அதிகரித்து வருவது கவலையளிக்கின்றது.
இலங்கை கடற்பரப்பில் 11 மணி நேரத்தின் பின்னர் குறிவைக்கப்பட்ட ஈரான் கப்பல்! வெடித்து சிதற வைத்த அமெரிக்கா
அவல நிலை
இத்தாக்குதல்களால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர் என்பதுடன், பாதுகாப்பான இடங்களைத் தேடி அலைய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

எந்தவொரு இராணுவ நடவடிக்கையிலோ அல்லது போரிலோ பொதுமக்கள் ஒருபோதும் இலக்காகக் கூடாது என்பது எனது பலமான நம்பிக்கையாகும். போரினால் பாதிக்கப்பட்டுள்ள மத்திய கிழக்கு நாடுகள் உட்பட அனைத்துப் பகுதிகளிலும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அனைத்துத் தரப்பினரிடமும் நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் தற்போது மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் பணியாற்றி வருகின்றனர். அந்த வகையில் இலங்கையைப் பொறுத்தவரை மத்திய கிழக்குப் பிராந்தியத்தின் அமைதி என்பது மிகவும் முக்கியமானதாகும்.
அங்குள்ள எமது நாட்டுப் பிரஜைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அவசியமானது." என்றும் நாமல் ராஜபக்ச தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam
போலீசாரால் கைது செய்யப்பட்ட பல்லவன், ஷாக்கில் சகோதரர்கள்... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam