கூற்றை நிரூபித்தால் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக டில்சான் விடுத்துள்ள சவால்
தாம், இரட்டைக் குடியுரிமை பெற்றவர் என்ற கூற்றை நிரூபிக்குமாறு மவ்பிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீரவுக்கு, முன்னாள் கிரிக்கட் வீரரும், ஐக்கிய ஜனநாயக குரல் வேட்பாளருமான திலகரட்ன டில்சான், சவால் விடுத்துள்ளார்.
தனது குடியுரிமையை கேள்விக்குள்ளாக்கியதற்காக, திலித் ஜயவீரவை கடுமையாக சாடியுள்ள திலகரத்ன டில்சான், ஜயவீர, அவரின் கூற்றை நிரூபிக்க முடிந்தால், தாம் தேர்தல் முயற்சியில் இருந்து விலகத் தயார் என்று கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், ஜயவீர அவ்வாறு செய்யத் தவறினால், அவர் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவிக்க வேண்டும் என்றும் டில்சான் தெரிவித்துள்ளார்.
பழைய அரசியல் கலாசாரம்
இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த திலகரத்ன டில்சான், இதற்கு முன்னர் ஜயவீர, அவரது அரசியல் கட்சியில் இணைவதற்கான அழைப்பை தமக்கு விடுத்த போது, தமது குடியுரிமை குறித்து அவருக்கு தெரியாமல் இருந்ததா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜயவீர, தம்மை அவரது கட்சியில் இணைந்து களுத்துறை மாவட்டத்தில் போட்டியிட அழைத்தார். முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க ஊடாக இந்த அழைப்பு விடுக்கப்பட்டது.
எனினும், தற்போது அவர் சேறு பூசும் பழைய அரசியல் கலாசாரத்தையே இன்னும் பின்பற்றுவது வருத்தமளிக்கிறது என்று டில்சான் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பசங்க பட நடிகர் ஜீவாவா இது, இப்போது அவர் ஒரு பிரபல கம்பெனியின் CEO... இந்த விஷயம் தெரியுமா? Cineulagam

4 நாட்களில் வேறலெவல் வசூல் வேட்டையில் ரஜினியின் கூலி... தமிழகத்தில் மட்டும் எவ்வளவு தெரியுமா? Cineulagam

ரஷ்யாவும் உக்ரைனும் சொந்தமாக்க மல்லுக்கட்டும் Donetsk... குவிந்து கிடக்கும் புதையல் என்ன? News Lankasri
