போதகர் ஜெரோம் பெர்ணான்டோவுக்கும் நாவலப்பிட்டி மக்களுக்கும் இடையில் முறுகல்
நாவலப்பிட்டியில் சிறுவர்களுக்கான புனர்வாழ்வு நிலையத்தை நிர்மாணிப்பதற்காக, வருகை தந்த போது போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் கிராம மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
புனர்வாழ்வு நிலையத்துக்கு பதிலாக போதகர் ஜெரோம், ஒரு மத தலத்தை நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளதாக குற்றம் சுமத்தியே கிராம மக்கள், ஜெரோமின் பாதுகாப்பு அதிகாரிகளுடன் முரண்பட்டுள்ளனர்.
பொலிஸாரின் தடையீடு
இதனையடுத்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர பொலிஸார் தலையிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், பெரும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் போதகர் ஜெரோம் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
முன்னதாக, பௌத்த மத நிந்தனை என்ற குற்றச்சாட்டின் பேரில், போதகர் ஜெரோம் பெர்ணான்டோ, கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 3 நாட்கள் முன்

எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பிரபலம், அவரால் ஏற்படும் பரபரப்பு... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

11 துப்பாக்கிகள், 40 கத்திகள்.,100 பேர் கைது! பிரித்தானிய பொலிஸாரின் முன்னெச்சரிக்கை எதற்காக? News Lankasri
