மலையகத்தின் அடிமை விலங்கை உடைத்தெறிய தயாராகும் அநுர
மலையகத்திலுள்ள கல்வி கற்றவர்களுக்கு அங்கேயே தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுத்து அவர்களை பொருளாதார ரீதியில் ஸ்திரப்படுத்துவதே தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு என அக்கட்சியின் சார்பில் நாடாளுமன்ற தேர்தலுக்காக நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் வைத்தியர் ஆறுமுகம் ஜெயராஜன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், ”மலையகமானது, இதுவரை நிலையான ஒரு அபிவிருத்தியை நோக்கி செல்லவில்லை என்பதே எமது நிலைப்பாடாக இருக்கின்றது.
முக்கியமாக, பொருளாதார வளர்ச்சி, கல்வி, சுகாதாரம் மற்றும் உட்கட்மைப்பு வசதிகள் ஆகியனவற்றில் மலையக மக்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து கொண்டிருக்கின்றார்கள்.
எனவே, எம்மிடம் இருக்கும் வளங்களை சரியான முறையில் பயன்படுத்தாமையே நாட்டினை ஒரு வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லவிடாமல் செய்கின்றது. அதே காரணம் தான் மலையகத்தின் வளர்ச்சிக்கும் தடையாக இருக்கின்றது” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறியுள்ளதாவது,
வெற்றிமாறனை தொடர்ந்து பிளாக்பஸ்டர் இயக்குநருடன் இணையும் சிம்பு? வெளிவந்த வேற லெவல் அப்டேட் Cineulagam
900 கடந்த இறப்பு எண்ணிக்கை... இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள் News Lankasri