குழந்தையை கொலை செய்யப் போவதாக 2 மில்லியன் கப்பம் கோரிய கும்பல்
குழந்தைகளை கொலை செய்யப் போவதாக மிரட்டி 2 மில்லியன் ரூபா கப்பம் கோரிய 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் நீர்கொழும்பு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர். படல்கம பொலிஸ் பிரிவில் உள்ள மல்லவகெதரவில் வசிக்கும் நபரின் குழந்தையை கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த நபர் சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் செய்த முறைப்பாட்டிற்கமைய, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குற்ற புலனாய்வு பிரிவு
இது தொடர்பாக, நீர்கொழும்பு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் குழு, சீதுவ பொலிஸ் பிரிவில் உள்ள தம்பத்துரை பகுதியில் நேற்று சோதனை நடத்தினர்.
இதன்போது 10 மில்லியன் ரூபாவை கப்பமாக கோரிய இரண்டு சந்தேக நபர்களைக் கைது செய்து படல்கம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். சந்தேக நபர்கள் 32 மற்றும் 46 வயதுடையவர்களாகும்.
விசாரணையில், இந்த குற்றத்திற்காக இரண்டு திட்டமிட்ட குற்றவாளிகளின் பெயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபடவில்லை எனவும் முறைப்பாட்டாளரை மிரட்ட இந்த பெயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன எனவும் தெரியவந்தது.
போலி துப்பாக்கி
மேலும், இந்த குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட போலி துப்பாக்கி, மோட்டார் சைக்கிள் மற்றும் கப்பமாக பெற்ற பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட முச்சக்கர வண்டி ஆகியவை பொலிஸார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட பல கையடக்க தொலைபேசிகள், அந்த தொலைபேசிகளில் உள்ள அனைத்து சிம் அட்டைகள், பல்வேறு வங்கிகளுக்கு சொந்தமான ATM அட்டைகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டியின் அனைத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
படல்கம பொலிஸார் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 10 மணி நேரம் முன்

பயணம் எனக்கு எளிதாக இல்லை, விடாமுயற்சி உடன் வாழ்ந்து வருகிறேன்! - 33 வருடங்கள் நிறைவு செய்த அஜித் அறிக்கை Cineulagam

பாரிய முதலீடுகளால் இன்னொரு ஏழை நாட்டிற்கு வலை விரித்த சீனா... முதற்கட்டமாக ரூ 3,000 கோடி News Lankasri
