இரவோடு இரவாக படுகொலை செய்யப்பட்ட ஈரானின் முக்கிய தளபதி
ஈரானிய இராணுவத் தளபதி அலி ஷட்மானி இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெஹ்ரானில் நேற்று(16.06.2025) இரவு நடந்த தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
எனினும், ஈரானிய ஊடகங்களில் ஷட்மானியின் மரணம் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
முக்கிய பதவி
உயரடுக்கு IRGC படைக்கும் வழக்கமான ஈரானிய இராணுவத்திற்கும் இடையிலான கூட்டு இராணுவ நடவடிக்கைகளைத் திட்டமிடும் தலைமையகத்தின் தலைவராக அலி ஷட்மானி கடமையாற்றி வந்தார்.

இதற்கு முன்னர் அதே பதவியை வகித்த கோலமாலி ரஷீத், கடந்த வாரம் நடந்த இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டதையடுத்து அலி ஷட்மானி அந்த பதவிக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இதெல்லாம் வெறும் ட்ராமா! மோகன் சர்மா முதியோர் இல்ல நாடகம் குறித்து குட்டி பத்மினி பரபரப்பு பேட்டி Manithan
இலங்கையில் அரைகுறை கவர்ச்சி உடையில் வலம்வந்த சீரியல் நடிகை தர்ஷனா... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam