சிறைச்சாலைகளில் அடுத்தடுத்து பதற்றமான சூழ்நிலை - பின்னணி குறித்து வெளியான புலனாய்வு தகவல்
நாடு முழுவதும் பல சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள மோதல்கள் மற்றும் பதற்றமான சூழ்நிலைகளின் பின்னணியில் பாரிய சதித்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக புலனாய்வுப் பிரிவினர் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
நாட்டின் ஐந்து சிறைச்சாலைகளில் கலவரங்கள் வெடிக்கக்கூடும் எனப் புலனாய்வுப் பிரிவினர் ஏற்கனவே எச்சரித்திருந்தனர்.
எச்சரிக்கை விடுக்கப்பட்ட சில நாட்களில் கொழும்பு மெகசின், குருவிட்ட மற்றும் நீர்கொழும்பு பல்லன்சேனை ஆகிய சிறைச்சாலைகளில் ஒரே நேரத்தில் வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
கைதிகள் பலி
இந்த அமைதியற்ற சூழ்நிலை காரணமாக மூன்று கைதிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு மெகசின் சிறைச்சாலையின் மதிலுக்கு வெளியில் இருந்து அடையாளம் தெரியாத நபர்களால் வீசப்பட்ட ஹெரோயின் போதைப்பொருள் பொதியொன்றை சிறைச்சாலை அதிகாரிகள் பொறுப்பேற்றதையடுத்து, கைதிகளுக்கு இடையே முதன்முதலில் பதற்றம் ஆரம்பமானது.
அது அடுத்த நாளும் தொடர்ந்தது. அடுத்து குருவிட்ட சிறைச்சாலையிலும் கைதிகளுக்கு இடையே கடும் பதற்ற நிலை ஏற்பட்டது.
சிறைச்சாலைக்கு இடமாற்றம்
ஆத்திரமடைந்த கைதிகள் அங்கிருந்த மருத்துவமனை மற்றும் பல கட்டடங்கள் மீது தாக்குதல் நடத்தி பலத்த சேதங்களை ஏற்படுத்தினர்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து குருவிட்ட சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட ஆயிரம் பேருக்கும் அதிகமான கைதிகளுக்கு இடவசதிகள் போதாது எனக் கூறி ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டமே இந்த மோதலுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
நீர்கொழும்பு பல்லன்சேனை சிறைச்சாலையிலும் காலை உணவு வழங்குவதற்காகச் சிறைக் கூண்டுகளிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்ட போது, போதைப்பொருள் தகராறைக் அடிப்படையாகக் கொண்டு அமைதியின்மை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
27வது திருமண நாள் நெருங்கும் நிலையில் விவாகரத்து வழக்கு வாபஸ்! விஜய்யுடன் மீண்டும் இணைவாரா? Manithan
ஸ்காட்லாந்தில் கொடூர பாலியல் குற்றவாளி தப்பியோட்டம்: தேடுதல் வேட்டையில் காவல்துறையினர் News Lankasri
இலங்கையில் அரைகுறை கவர்ச்சி உடையில் வலம்வந்த சீரியல் நடிகை தர்ஷனா... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam