ஊவா மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் வெள்ளிக்கிழமை ( 1) திகதி ஊவா மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்குவதற்கு ஊவா மாகாண ஆளுநரால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகை நாளை மறுதினம் (31) கொண்டாடப்படவுள்ள நிலையில், தீபாவளி தினத்துக்கு மறுநாள் தமிழ் மாணவர்களுக்கு பாடசாலைக்கு வருவதில் சிரமம் என்பதால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஊவா மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து வலயக்கல்விப் பணிப்பாளர்களுக்கும் ஊவா மாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.

விடுமுறை அளிப்பதற்கு அங்கீகாரம்
இதன்படி, 01.11.2024 அன்று தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை அளிப்பதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த நாளுக்கான கல்வி செயற்பாடுகளை எதிர்வரும் நவம்பர் 9 ஆம் திகதி முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஊவா மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்கும் அதிர்ஷ்டம் கொண்ட டாப் 3 ராசியினர்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
பிக்பாஸ் 9 நிகழ்ச்சி முடிந்த கையோடு போட்டியாளர்கள் எங்கே சென்றுள்ளார்கள் பாருங்க... போட்டோ இதோ Cineulagam