அதிவேக தொடருந்தில் மோதி இளம் யுவதி உயிரிழப்பு
அளுத்கமவில் இருந்து பொல்கஹவெல நோக்கி பயணித்த அதிவேக தொடருந்தில் மோதி யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பயாகல - கல்லனமுல்ல பகுதியைச் சேர்ந்த டோனா இஸ்ஷினி சிதாரா என்ற 23 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
களுத்துறை, வேலபுர வித்தியாலயத்திற்கு பின்புற பகுதியில் இன்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பொலிஸார் விசாரணை
தொடருந்து பாதைக்கு அருகில் நின்று கொண்டு தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
 
இதனையடுத்து சடலம் களுத்துறை தெற்கு தொடருந்து நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
        
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        