அறுகம் குடா பகுதியில் அதிர்ச்சி கொடுத்த இஸ்ரேல் இராணுவத்தின் நடமாட்டம்
காசா யுத்தத்தில் போரிட்ட அதிகளவிலான இஸ்ரேலிய இராணுவத்தினர் விடுமுறையினை கழிப்பதற்காக அறுகம்குடா பகுதிக்கு வருகை தந்துள்ளமை தெரியவந்துள்ளதாக பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் அருஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அறுகம் குடா விவகாரம் தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயங்களை வெளியிட்டுள்ளார்.
அறுகம் குடா பகுதியில் தற்போது இஸ்ரேல் இராணுவத்தினரின் நடமாட்டம் அதிகரித்துள்ளதுடன், இவை சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அறுகம் குடா பகுதியில் இஸ்ரேல் சுற்றுலா பயணிகள் மற்றும் அவர்களது தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் அச்சுறுத்தல் உள்ளதாக அமெரிக்காவின் எச்சரிக்கை வெளியானதினை அடுத்து கவச வாகனங்களுடன் அறுகம் குடா பகுதி போர்களமாக காட்சியளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அமெரிக்கா அண்மையில் வழங்கிய உளவு விமானமும் சுற்றுத்திரிந்துள்ளதுடன், இந்த தாக்குதல் திட்டத்திற்கு வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி, பயிற்சி என்பன வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த பின்னணியில் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வருகை தந்துள்ள இஸ்ரேலியர்கள் வியாபாரம், மதம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக செய்திகள் வெளியாகி, சுற்றுலாத்துறைக்கு பெரும் நெருக்கடியினை ஏற்படுத்தியுள்ளது.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
