இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
இலங்கை மத்திய வங்கி, மே மாத உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் தொடர்பில் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி,2025 மே மாத இறுதியில் இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 6,284 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டொலர் கையிருப்பு
இது, 2025 ஏப்ரல் மாத இறுதியில் பதிவான 6,327 மில்லியன் அமெரிக்க டொலர் கையிருப்பு சொத்துக்களுடன் ஒப்பிடும்போது 0.7% வீழ்ச்சியாகும்.

இதற்கிடையில், இலங்கை மத்திய வங்கி 2025 மே மாதத்தில் உள்நாட்டு அந்நிய செலாவணி சந்தையில் இருந்து 260.8 மில்லியன் டொலர்களை வாங்கி 4 மில்லியன் டொலர்களை விற்பனை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 2025 மே மாதத்தில் உள்நாட்டு அந்நிய செலாவணி சந்தையில் இருந்து மத்திய வங்கி வாங்கிய டொலர்களின் நிகர தொகை 256.8 மில்லியன் டொலர்கள் ஆகும்.
இந்தியாவுக்கு எதிராக புலம்பெயர் டாக்சி ஓட்டுநரின் மகன்: அவுஸ்திரேலிய அணியில் இந்திய வம்சாவளி பவுலர் News Lankasri
7ம் அறிவு படத்தின் வில்லன் டாங்லியை நியாபகம் இருக்கா? முகம் எல்லாம் ஒட்டிப்போய் அடையாளமே தெரியலையே... Cineulagam