பொது வேட்பாளராக போட்டியிட தயார்: தயாசிறி ஜயசேகர
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக தாம் போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இலங்கை சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சூசகமான கருத்தை தெரிவித்துள்ளார்.
இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தேர்தலில் போட்டியிட தீர்மானித்தால் வெற்றி பெற முடியாது என ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
பொது வேட்பாளர்
இலங்கை பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது என்பதால், பெரமுன மற்றும் இலங்கை சுதந்திரக்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்த ஒரு பொது வேட்பாளர் தேவை என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியுடன் தாம் இணையப் போவதில்லை என்றும் இலங்கை சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
அதிரவைக்கும் வாக்கு எண்ணிக்கை..! முன்னிலை வகிக்கும் தவெக - வேட்பாளர்களை பாதுகாக்க விஜய் அவசர ஏற்பாடுகள்
விஜய்யின் வீடு தேடி பூங்கொத்துடன் வந்த நபர்! படையெடுக்கும் முக்கிய அதிகாரிகள் - அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு