தேசியத் தலைவரால் அங்கீகரிக்கப்பட்ட வீட்டில் சுமந்திரன் இருக்க முடியாது! தொடரும் சர்ச்சைகள்
தேசிய தலைவரால் உருவாக்கப்பட்ட இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியில்,தமிழ் தேசியத்தை ஏற்றுக்கொள்ளாத சுமந்திரனிற்கு என்ன வேலை,ஏன் இதில் இருக்க வேண்டும் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட, கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவருமாக இருக்கக்கூடிய கிளிநொச்சி சிவில் சமூக செயற்பாட்டாளர் ஜீவன் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், சீ.வீ.கே சிவஞானம், சுமந்திரன், சாணக்கியன் மற்றும் சத்தியலிங்கம் ஆகியோர் இல்லை எனில் வடக்கு கிழக்கில் தமிழ் அரசியல் நிதானமான முறையில் காணப்படும்.
காரணம் இவர்கள் அனைவரும் இலங்கை அரசால் களமிறக்கப்பட்ட முக்கிய முகவர்களாகவே செயற்படுகின்றனர்.
சுமந்திரனுக்கு முள்ளிவாய்காலும் அங்கு நடந்த விடயங்கள் பற்றியும் தெரியாது. தமிழ் இனப்படுகொலை நடக்கவில்லை என்றவர் இனி வரும் காலங்களில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றும் கூறுவார் என தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் கூறிய முழுமையான கருத்துக்களை இந்த காணொளியில் காணலாம்...,
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri