சட்டத்தரணிகளுக்கான கட்டணம் முதல் நீதிக்கான தடைகள் வரை..! திணறும் பொதுமக்கள்
“எங்களுக்கு சட்ட உதவி தேவை. ஆனால் பணம் இல்லாததால் நீதியை அணுக முடியவில்லை“ என பொதுமக்கள், சட்டத்தரணிகள் மீது ஒரு பொதுவான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
அத்தாட்சிப்படுத்தல், வாடகை ஒப்பந்தங்கள், நில உடன்படிக்கைகள் மற்றும் சத்தியப் பிரமானங்கள் போன்ற எளிய ஆவணங்களுக்குக்கூட சில சட்டத்தரணிகள் மிக அதிகமான கட்டணங்களை அறவிடுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
வழக்கு நீடிப்புகள், வழக்கு முன்னேற்றம் குறித்து வாடிக்கையாளர்களுக்கு சரியான தகவல் கிடைக்காமை, அடுத்த விசாரணைத் திகதி மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் விளக்கப்படாமை என இன்னும் சில குற்றச்சாட்டுக்களையும் மக்கள் முன்வைத்துள்ளனர்.
இதே போன்று நாட்டில் பல பகுதிகளிலும் உள்ள சாமானிய மக்களிடம் சட்டத்தரணிகள் அளவுக்கு அதிகமான பணத்தை பெறுவதாக கூறப்படுகின்றது.
இந்த பிரச்சினை தொடர்பான மேலதிக விபரங்களை நியூஸ் இன்சைட் நிகழ்ச்சி ஆராய்கின்றது..
இலங்கை வரலாற்றை புரட்டிப் போட்ட நீதிமன்ற தீர்ப்பு..! ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் நடந்த அதிரடி திருப்பம்