வாகனப் பதிவு தொடர்பான பிரச்சினையா..! இதோ முறைப்பாடு செய்ய புதிய வழி
வாகனங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகளின்போது பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் வாகனங்களால் ஏற்படும் அசௌகரியங்கள் தொடர்பில் முறைப்பாடுகளைத் தெரிவிப்பதற்காக புதிய வட்ஸ்அப் சேவையொன்றை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.
மோட்டார் போக்குவரத்து ஆணையாளரினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தச் சேவையின் ஊடாக, பொதுமக்கள் தங்களது முறைப்பாடுகளை எழுத்துமூலம் 074 245 3300 என்ற வட்ஸ்அப் இலக்கத்திற்கு அனுப்ப முடியும்.
இந்தப் புதிய சேவை
வாகனப் பதிவில் ஏற்படும் தாமதங்கள், முறைகேடுகள் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பிலும், வாகனங்களின் செயற்பாடுகளால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் பொது இடையூறுகள் தொடர்பிலும் முறைப்பாடுகளை இந்த இலக்கத்திற்கு அனுப்ப முடியும்.

பொதுமக்கள் தங்களது பிரச்சினைகளை நேரடியாகத் திணைக்களத்திடம் தெரிவித்து, அவற்றுக்கு உரிய நேரத்தில் தீர்வு அல்லது பதில் வழங்குவதற்கான வசதியை ஏற்படுத்தும் நோக்கில் இந்தப் புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.