யாழில் பேருந்தில் சிறுமிகளிடம் அத்துமீறிய இருவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
யாழ்ப்பாணம் தனங்களப்பு சந்தியில் சிறுமிகளை பாலியல் அத்துமீறல் செயற்பாட்டுக்கு உட்படுத்த முயற்சித்த இரு சந்தேகநபர்களை தடுப்புக் காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த இருவரும் நேற்று சாவகச்சேரி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீதிமன்றில் முன்னிலை
இந்த விடயம் தொடர்பில் தெரியவருகையில்,
தனங்களப்பு பகுதியில் குறித்த இருவரும் மிகக் கொடூரமான செயற்பாடுகளைச் தொடர்ச்சியாகச் செய்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இவர்களால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்துடன் வாழ்க்கை நடாத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் குறித்த இருவரும் அண்மையில் தனங்களப்பு சந்தியில் சிறுமிகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக கூறப்பட்டதை தொடர்ந்து அவர்களுக்கெதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.





உலக அரசியல் பற்றி ஒரு கேள்வி - யாரை நோக்கி கடிதம் எழுத வேண்டும்! 19 மணி நேரம் முன்

சோழனை வீட்டிற்கு அழைத்து வந்து மோசமாக அசிங்கப்படுத்தும் நிலாவின் அப்பா.. அய்யனார் துணை புரொமோ Cineulagam

நீட் தேர்வில் 99.9 சதவீதத்துடன் முதலிடம் பிடித்த மாணவி யார்? இவரின் வெற்றிக்கான ரகசியம் News Lankasri
