யாழில் மாவட்ட செயலகத்திற்குள் இரகசியமாக சென்ற ஊடக பிரதி அமைச்சர்

Jaffna Journalists In Sri Lanka Nothern Province Protest Ministry of Mass Media
By Theepan Jul 31, 2026 11:34 PM GMT
Report

யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஊடகவியலாளர்கள் போராட்டம் நடத்திய நிலையில் அவர்களை சந்திக்காது இரகசியமான முறையில் மாவட்ட செயலகத்திற்குள் சென்று ஊடக பிரதி அமைச்சர் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

மாவட்ட செயலகத்தின் பிரதான நுழைவாயில் முன்பாக ஊடகவியலாளர்கள் நீதி கோரி பல்வேறு கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தியுள்ளனர்.

இலங்கை வரலாற்றை புரட்டிப் போட்ட நீதிமன்ற தீர்ப்பு..! ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் நடந்த அதிரடி திருப்பம்

இலங்கை வரலாற்றை புரட்டிப் போட்ட நீதிமன்ற தீர்ப்பு..! ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் நடந்த அதிரடி திருப்பம்

ஊடகவியலாளர் போராட்டம்   

ஊடக பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன பங்கேற்புடன் அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட செயலகத்தில் ஊடக செயலமர்வு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

யாழில் மாவட்ட செயலகத்திற்குள் இரகசியமாக சென்ற ஊடக பிரதி அமைச்சர் | Deputy Media Minister Secretly Enter Secretariat

இந்நிலையில் அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசு பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் ஊடகவியலாளர்களின் படுகொலைகள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்களுக்கு சுயாதீன விசாரணை மற்றும் நீதி கோரி யாழ் ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்ட ஊடகவியலாளர்களை கண்டுகொள்ளாமல் இரகசியமான முறையில் மற்றைய நுழைவாயிலால் மாவட்ட செயலகத்திற்குள் நுழைந்த ஊடக பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன கருத்தமர்வில் பங்கேற்றுள்ளார்.

யாழ்.ஊடக அமையத் தலைவர் 

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி போராடிய ஊடகவியலாளர்களை சந்திக்க மறுத்த ஊடக பிரதி அமைச்சரின் செயற்பாட்டின் மூலம் இந்த அரசாங்கம் ஊடகவியலாளர்களுக்கு நீதியை பெற்று தரப்போவதில்லை என்பதனை தெட்ட தெளிவாக கோடிட்டு காட்டியுள்ளதாக , யாழ்.ஊடக அமையத் தலைவர் கே.செல்வக்குமார் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்ட செயலகத்துக்கு முன்னால் ஊடகவியலாளர்கள் ஒன்று கூடி போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.

யாழில் மாவட்ட செயலகத்திற்குள் இரகசியமாக சென்ற ஊடக பிரதி அமைச்சர் | Deputy Media Minister Secretly Enter Secretariat

எங்களுடன் கூட பணியாற்றிய 39 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை காலம் எந்த அரசாங்கமும் விசாரணைகளை முன்னெடுக்கவில்லை.

இந்த புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து, இரண்டு வருடங்கள் கடந்த நிலையில், 39 ஊடகவியலாளர்களின் படுகொலை விசாரணையை துரிதப்படுத்தாத நிலையில், நாங்கள் அதனை கண்டித்து, விசாரணையை துரிதப்படுத்துமாறு கோரி இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தோம்.

கடந்த காலங்களிலும் நாம் இதனை வலியுறுத்திய போது, ஊடக அமைச்சர்கள் அனைவரும் எங்களோடு பேசுவதற்க்கு ஒத்துழைப்பு தந்தார்கள்.

ஊடகவியலாளர்கள் படுகொலை

எங்களுடைய பேச்சை கேட்டார்கள். எங்களுடைய வலிகள், எங்களுடைய வேதனைகள் ஊடகவியலாளர்கள் படுகொலை சம்பந்தமான, விசாரணையை சம்பந்தமாக கேட்டார்கள். ஆனால் இன்று ஊடக பிரதி அமைச்சர் எங்களை சந்திக்க மறுத்திருக்கிறார்.

இந்த அரசாங்கம் உண்மையில் ஊடகவியலாளர்களை எப்படி கையாளுகின்றார்கள் என்பதனையே இது காட்டுகிறது. நாங்கள் இந்த போராட்டத்தை மாவட்ட செயலக பிரதான நுழைவாயிலுக்கு அருகில் முன்னெடுத்த போது, வாயில் அருகில் எம்மை நிற்க விடாது அப்புறப்படுத்த மாவட்ட செயலர் பொலிஸாருக்கு பணித்துள்ளார்.

யாழில் மாவட்ட செயலகத்திற்குள் இரகசியமாக சென்ற ஊடக பிரதி அமைச்சர் | Deputy Media Minister Secretly Enter Secretariat

இந்த ஊடகவியலாளர் வலி மாவட்ட செயலாளருக்கு தெரியும். தெரிந்தும் அவர் இந்த அரசுக்கு வக்காலத்து வாங்குறாரோ என்ற நிலைதான் இங்கே இருக்கிறது.

தமது பதவிகளை தக்க வைப்பதற்காக இப்படி ஒரு பிழைப்பை நடத்துறது உண்மையிலேயே மனதில் வேதனையாகவும் ஒரு கேவலமான செயலாகும் இன்று நாங்கள் 39 ஊடகவியலாளருக்கு நீதி வேண்டி இந்த இடத்தில் வந்து வலிகளோடுதான் இருக்கிறோம்.

ஆனால் இந்த அரசு ஆட்சிக்கு வர முதல் ஊடகவியலாளர் படுகொலையை விசாரிப்போம். விசாரணை கோவைகளை கைகளில் எடுப்போம் என உறுதி கூறினார்கள் என

பாகிஸ்தான் மலையேற்றப் பகுதியில் பனிச்சரிவு: 10 பேர் மாயம்! நால்வர் சடலமாக கண்டெடுப்பு

பாகிஸ்தான் மலையேற்றப் பகுதியில் பனிச்சரிவு: 10 பேர் மாயம்! நால்வர் சடலமாக கண்டெடுப்பு

தாய்லாந்து எல்லை மோதல்: 20000இற்கும் அதிகமான கம்போடிய மக்கள் வீடு திரும்ப முடியாது துயரம்

தாய்லாந்து எல்லை மோதல்: 20000இற்கும் அதிகமான கம்போடிய மக்கள் வீடு திரும்ப முடியாது துயரம்


5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், கனடா, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US