தீவிரமடையும் காவேரி நீர் விவகாரம்.. தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய்க்கு கர்நாடகாவிலிருந்து வந்த அறிவிப்பு
தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜோசப் விஜய் இப்போதைக்கு கர்நாடகாவிற்கு வர வேண்டாம் என கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளதாக இந்திய செய்திகள் வெளியாகியுள்ளன.
காவேரி நீர் திறப்பு மற்றும் காவேரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது குறித்து தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டிற்கு, 3,500 கன அடி நீர் வீதம் 15 நாட்களுக்கு கர்நாடகா திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ள நிலையில், கர்நாடகா நீரை திறக்க மறுத்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டிற்கு நீர் திறக்க கூடாது என கர்நாடகாவில் உள்ள விவசாய அமைப்புகள் மற்றும் கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
இடம்பெறும் போராட்டங்கள்..
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜோசப் விஜய், கர்நாடகாவிற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தற்போது உள்ள சூழலில் விஜய் இப்போதைக்கு கர்நாடகாவிற்கு வர வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் நீர்வள மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் இந்த விவகாரம் தொடர்பாக உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
இதன் பின்னர் பேசிய அவர், "இரண்டு மாநில தலைமைச் செயலாளர்களும் இது குறித்து விவாதித்துள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சரும் நானும் அவரவர் மாநில நலனில் அக்கறையுடன் உள்ளோம்.
இரு மாநிலங்களுக்கும் சிக்கல் ஏற்படுத்தாத தீர்வை எட்ட முயற்சிக்கிறோம். போதிய நீர் இல்லை என்று கூறியும் தமிழ்நாட்டிற்கு நீர் திறக்க வேண்டும் என உத்தரவிட்டது வேதனை அளிக்கிறது.

தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாத சூழல் உள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம். தமிழ்நாடு முதல்வர் விஜய் வரும்போது போராட்டம் நடந்தால் நன்றாக இருக்காது.
வேறொரு திகதியில் சந்திப்பு கூட்டத்தை நடத்தலாம் என விஜய்க்கு கோரிக்கை வைக்கிறேன். சிறிது காலம் காத்திருக்கலாம். உரிய நேரம் வரும்போது இருவரும் சந்தித்து ஆலோசிப்போம்" என தெரிவித்துள்ளார்.
எல்நினோ தாக்கம்! மட்டக்களப்பில் குடிநீர் பிரச்சினை - நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri