7 வயது சிறுமியை தகாதமுறைக்கு உட்படுத்திய இளைஞனுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
மட்டக்களப்பு வாகரையில் 7 வயது சிறுமி ஒருவரை தகாதமுறைக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 சிறுவர் உட்பட 5 பேரில் 4 சிறுவர்களையும் பிணையில் விடுவித்ததுடன் 18 வயதுயை ஒருவரை எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த உத்தரவை நேற்று (13.03.2024) வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதிபதி வழங்கியுள்ளார்.
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணை
வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் கணவனை இழந்த தாயார் ஒருவர் அவரது 7 வயது சிறுமியை வீட்டில் தனியாக விட்டுவிட்டு தினமும் வேலைக்கு சென்றுவரும் நிலையில் சிறுமியுடன் அந்தபகுதியைச் சேர்ந்த 11 சிறுவன் ஒருவன் விளையாட்டில் தோல்வியடைந்த சிறுமிக்கு தண்டனை என்ற ரீதியில் சிறுமியை தகாதமுறைக்கு ஈடுபடுத்தியுள்ளார்.

இதனை தொடர்ந்து குறித்த சிறுவன் ஏனைய 14,15,18 வயதுடைய நண்பர்களுக்கும் இந்த சூட்சமத்தை தெரிவித்துள்ளதையடுத்து குறித்த சிறுமியுடன் தனிதனியாக சிறுவர்கள் விளையாட்டு என்ற பேர்வையில் தகாதமுறைக்கு ஈடுபடுத்தியுள்ள நிலையில் இதனை அவதானித்த அந்தபகுதி இளைஞன் ஒருவர் சிறுமியின் தாயாருக்கு தெரியப்படுத்தியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் பொலிஸாரிடம் முறையிட்டதையடுத்து 11 வயதுடைய ஒருவரையும், 14 வயதுடைய இருவரையும் 15 வயதுடைய ஒருவரையும் 18 வயதுடைய ஒருவர் உட்பட 5 பேரை நேற்று (13) கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களை வாழைச்சேனை நீதவான் நீதி மன்றில் முன்னிலைப்பட்டதையடுத்து 15 வயதுக்கு உட்பட் 4 சிறுவர்களையும் சட்ட வைத்தியரிடம் சேதனைக்கு உட்படுத்துமாறும் அடுத்த வழக்கிற்கு முன்னிலையாகுமாறும் பிணையில் விடுவத்ததுடன் 18 வயதுடையவரை எதிர்வரும் 27 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விறுவிறுப்பாக11 மணிநேரம் நடைபெற்ற வாக்குப்பதிவு! ஆறு மணி கடந்து வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
தமிழக சட்டமன்ற தேர்தல்! 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி உறுதி - வாக்களித்த சற்றுநேரத்திலேயே அறிவித்த ஓ.பன்னீர்செல்வம்
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
ட்ரம்பின் முற்றுகை ஒரு பக்கம்... 34 எண்ணெய்க் கப்பல்களை சாமர்த்தியமாக வெளியேற்றிய ஈரான் News Lankasri