ஜூன் 30ற்குள் TIN பதிவு செய்யாதவர்களுக்கு அடுத்து என்ன நடக்கும்! சிறை தண்டனை நிச்சயமா..
ஜூன் 30-க்குள் பதிவு செய்யவில்லை என்றால் சிறை தண்டனை அல்லது அபராதம் என்ற செய்தி தவறானது என்று வரி ஆலோசகர் வசந்தன் தெரிவித்தார்.
லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் குறிப்பிட்ட அவர்,
ஒவ்வொரு தனிநபருக்கும் வழங்கப்படும் ஒரு தனித்துவமான அடையாள எண். முறைசாரா பொருளாதாரத்தை முறையான பொருளாதாரமாக மாற்றவும், டிஜிட்டல் மயமாக்கலை முன்னெடுக்கவும் இது கொண்டுவரப்பட்டுள்ளது.
இலங்கையில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயம் TIN எண்ணைப் பெற வேண்டும். முதியவர்கள் உட்பட அனைவருக்கும் இது பொருந்தும். TIN எண் வைத்திருப்பது மட்டுமே வரி செலுத்துவதைக் குறிக்காது.
ஒரு குறிப்பிட்ட வருமான வரம்பைத் தாண்டுபவர்கள் மட்டுமே வரி செலுத்த வேண்டும். வருமானம் குறைவாக இருப்பவர்கள் வரி செலுத்தத் தேவையில்லை, ஆனால் அவர்கள் தங்களது விவரத் திரட்டுகளை (Return) சமர்ப்பிக்க வேண்டும்.
வங்கி கணக்கு ஆரம்பிக்க, சொத்துக்கள் அல்லது வாகனங்கள் வாங்க போன்ற முக்கிய நிதி நடவடிக்கைகளுக்கு இனி TIN எண் கட்டாயமாகும். ஜூன் 30-க்குள் பதிவு செய்யவில்லை என்றால் சிறை தண்டனை அல்லது அபராதம் என்ற செய்தி தவறானது.
உரிய காலத்தில் வருமான வரி அறிக்கையைச் சமர்ப்பிக்கத் தவறுபவர்களுக்கு மட்டுமே சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என குறிப்பிட்டார்.
TIN இலக்கம் தொடர்பான பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கனை விரிவாக விளக்குகின்றது கீழ்வரும் காணொளி..