கனடா - ஒட்டாவா கொடூர படுகொலை: சந்தேகநபரான மாணவன் நீதிமன்றத்தில் முன்னிலை
கனடா - ஒட்டாவாவில் வீடொன்றில் வைத்து 6 பேரைக் கொன்ற 19 வயது இலங்கை மாணவன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
சந்தேக நபரான 19 வயது பெப்ரியோ டி சொய்சா இன்று (14.3.2024) வியாழன் ஒட்டாவா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை 6 பேரைக் கொலை செய்த சந்தேக நபரின் YouTube கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொடூரமான முறையில் படுகொலை
கனடாவின் ஒட்டாவாவின் புறநகர் பகுதியான Barrhaven இல் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 6 இலங்கையர்கள் கடந்த புதன்கிழமை இரவு அவர்களது வீட்டில் வைத்து கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்தக் கொலைகளுடன் தொடர்புடைய 19 வயதுடைய இலங்கை மாணவர் பெப்ரியோ டி சொய்சா அன்றிரவு ஒட்டாவா பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இதேவேளை, கணனி விளையாட்டுகள் தொடர்பில் சந்தேகிக்கப்படும் 19 வயதுடைய இலங்கை மாணவர் நடத்தும் யூடியூப் சேனலை இடைநிறுத்துவதற்கு கூகுள் நடவடிக்கை எடுத்துள்ளது.
கொலை முயற்சி
இந்நிலையில் அவர் மீது 6 கொலை மற்றும் ஒரு கொலை முயற்சி குற்றாச்சாட்டுக்கள் பதிவாகி உள்ளன.
சந்தேக நபரான மாணவன் பெப்ரியோ டி சொய்சா இன்று வியாழன் ஒட்டாவா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
முருகன், ரொபேர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் விடயத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் - சட்டத்தரணி புகழேந்தி பாண்டியன் குற்றச்சாட்டு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |