சர்வதேச சந்தையில் அதிரடி மாற்றம் கண்ட தங்கம் மற்றும் வெள்ளி விலை! இலங்கை நிலவரம்
சர்வதேச சந்தையில், நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.
அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கம் நேற்று ஐயாயிரம் டொலராக பதிவாகியிருந்த நிலையில், இன்று 4,924 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
வெள்ளியின் விலை
அதேநேரம், வெள்ளியின் விலையும் இன்றைய தினம் வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளது.

இதற்கமைய, நேற்று ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 76.35 டொலராக பதிவாகியிருந்த நிலையில், இன்று 73.4 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
இலங்கையிலும் மாற்றம்
அந்தவகையில், இலங்கையில் தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 394,560 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 361,600ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை .49,320 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,200 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச மற்றும் உள்ளூர் சந்தை நிலவரங்களுக்கு அமைவாகவே இந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.