பெண்கள் பாடசாலைக்குள் நுழைந்த மர்ம நபர் - மாணவிக்கு நேர்ந்த கொடுமை
கண்டியில் முன்னணி பெண்கள் பாடசாலையில் 4ஆம் வகுப்பில் படிக்கும் 9 வயது சிறுமி, பாடசாலைக்குள் வெளியாட்களால் பாலியல் சீண்டல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்து கண்டி பொலிஸ் நிலையத்தின் குழந்தைகள் மற்றும் மகளிர் பணியகம் விசாரணைகளை தொடங்கியுள்ளது.
பாடசாலைக்குள் தனக்கு ஏற்பட்ட சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் கூறியதை அடுத்து, அவர்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
பேராதனை போதனா மருத்துவமனை
மேலும் சிறுமி பேராதனை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மாணவி மருத்துவரிடம் பரிந்துரைக்கப்பட்டு அறிக்கை பெறப்படும் என கண்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாடசாலையின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், வெளி நபர் ஒருவர் பாடசாலைக்குள் நுழைந்திருப்பது தெரிய வந்துள்ளது.
பாதுகாப்பின்மை
மேலும் அவர் எங்கிருந்து பாடசாலைக்குள் நுழைந்தார் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பல ஆண்டுகளாக பாடசாலையில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்த பாதுகாவலர்கள் கடந்த காலங்களில் நீக்கப்பட்டு, புதியவர்கள் குழு சேர்க்கப்பட்டுள்ளதாகவும், இதுவும் பாதுகாப்பின்மைக்கு பங்களித்துள்ளதாகவும் பெற்றோர் பாடசாலை நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர்.
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 18 மணி நேரம் முன்
தமிழில் ரீமேக் ஆகப்போகும் தெலுங்கில் ஹிட் சீரியலான Chamanthi... யார் நடிக்கிறார்கள் பாருங்க... Cineulagam
வீட்டுப் பிரச்சனைக்கு சிந்தாமணி தான் காரணம் என தெரிந்ததும் அதிரடி காட்டிய விஜயா... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
ஈஸ்வரி குறித்து பார்கவி சொன்ன விஷயம், ஆடிப்போன குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam