தமிழ் எம்.பிக்களை காட்டுக்குள் சுற்றி வளைத்த மக்கள் - வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்
மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலகத்திற்குட்பட்ட காரமுனை பிரதேசத்திலிருந்து பூர்வீகமாக வாழ்ந்து வந்த தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டள்ளதாகவும், அதனை அங்குள்ள முஸ்லிம் தரப்பு ஆக்கரமிக்க முற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறிநாத் மற்றும் சிறிநேசன் ஆகியோர் வெளிப்படுத்தியிருந்தார்கள்.
வடக்கில் மாவிலாறு எவ்வாறு குறிவைக்கப்படுகின்றதோ அவ்வாறு மட்டக்களப்பில் காரமுனை குறிவைக்கப்படுவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
சில ஆண்டுகளுக்கு முன் காரமுனை மண்ணை இலக்கு வைத்து சில குடியேற்றங்கள் நடைபெற இருந்த வேளை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களினால் இந்த விடயம் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது.
இருப்பினும் இம் மண்ணின் மீதான அச்சுறுத்தல் இன்று மற்றுமொரு வடிவில் உருமாறியுள்ளது. அதுதான் அங்கு இடம்பெறும் சட்டவிரோத காடளிப்பும் மக்களின் அமைதியை குலைக்கும் செயல்களும் ஆகும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநாத் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், 95 வயது மதிக்கதக்க மூதாட்டியொருவர் அது எங்களுடைய கிராமம் என்று தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.
இவ்வாறு களவிஜயம் மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறிநாத் மற்றும் சிறிநேசன் ஆகியோரை அங்குள்ள முஸ்லிம் மக்கள் செல்லவிடாது தடுத்துள்ளனர். மேலும், கடுமையான சொற்களாலும் தாக்கி பேசியுள்ளனர்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 16 மணி நேரம் முன்
தமிழில் ரீமேக் ஆகப்போகும் தெலுங்கில் ஹிட் சீரியலான Chamanthi... யார் நடிக்கிறார்கள் பாருங்க... Cineulagam
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்களுக்கு சன் டிவி வெளியிட்ட குட் நியூஸ்.... என்ன தெரியுமா? Cineulagam
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
ஈஸ்வரி குறித்து பார்கவி சொன்ன விஷயம், ஆடிப்போன குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
வீட்டுப் பிரச்சனைக்கு சிந்தாமணி தான் காரணம் என தெரிந்ததும் அதிரடி காட்டிய விஜயா... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri