ராஜபக்ச குடும்பத்தினர் சம்பந்தப்படாத ஈஸ்டர் தாக்குதல் வழக்கு! வெளியான மர்மங்கள்
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான வழக்குகள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில் இதில் பெரும் மர்மங்களும் சிக்கலும் மறைக்கப்பட்ட பல விடயங்கள் காணப்படுவதாக மக்கள் போராட்ட முன்னணி தெரிவிக்கிறது.
அந்த அமைப்பின் அழைப்பாளர் தரிந்து உடுவரகெதர தெரிவித்துள்ளதாவது, கோட்டாபய ஆட்சியில் இருக்கும் போது சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு சென்று அச்சுறுத்தல்கள் செய்து தங்களுக்கு சார்பானதாக 2021 ஆகஸ்ட் 10 ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்ட வழக்கே தொடர்ச்சியாக விசாரிக்கப்படுகிறது.
நீக்கப்பட்ட சாட்சியாளர்கள்
ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் முதல் சாட்சியாளரான ரோஹான் குணரத்தின மற்றும் இரண்டாவது சாட்சியான இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே.
ஆனால் ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரியின் பெயரை எழுதி கொடுத்த இன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான டி.டபிள்யூ.ஆர்.பி. செனவிரத்ன, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் CID பணிப்பாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர ஆகியோரின் சாட்சியங்கள் விடுவிக்கப்பட்டே விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

ஈஸ்டர் தாக்குதல் ஒரு சதித்திட்டம் அது ராஜபக்ச குடும்பத்தினர் செய்தது என நாடாளுமன்றில் அமைச்சர் பிமல் ரதநாயக்க வாய்கிலிய பேசிக் கொண்டு ராஜபக்ச தாக்கல் செய்த வழக்கை கொண்டு செல்கின்றனர்.

2021 ஆகஸ்ட் 10 ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் 21000 குற்றச்சாட்டுக்கள் சாட்டப்பட்டுள்ளன. ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான வழக்குகள் கொழும்பு 07, பௌத்தாலோக மாவத்தை, எண். C 76 இல் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்று வருகின்றன.