வீட்டில் திடீரென ஏற்பட்ட அனர்த்தம் - ஒரே குடும்பத்தை நேர்ந்த மூவருக்கு நேர்ந்த கதி
மொனரகல புத்தல பகுதியில் வீட்டின் அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் தந்தை, தாய் மற்றும் மூன்று வயது மகள் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் மொனராகல வீதியின் நாமண்டிய பகுதியிலுள்ள வீட்டின் அறையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இந்த அனர்த்தம் காரணமாக 29 வயதான தந்தை திலுக்ஷ மதுசங்க, 26 வயதான தாய் சுராஜி சகுந்தலா மற்றும் 3 வயது மகள் ஒனல்யா ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.
மருத்துவமனையில் சிகிச்சை
மூவரும் மொனராகல மாவட்ட பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த நிலையில் தாயும் மகளும் கராபிட்டிய போதனா மருத்துவமனைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் தொடர்பில் இதுவரை கண்டுபிடிக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புத்தல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
இந்தியாவிடம் மண்டியிட்ட பாகிஸ்தான்: விரக்தியில் டிவியை போட்டுடைத்த ரசிகர்: வைரல் வீடியோ News Lankasri