அபார வெற்றி ஈட்டிய இலங்கை : மஹேலவின் சாதனையை சமன் செய்த பதும் நிசங்க
2026 T20 உலகக் கோப்பையின் 30வது போட்டியில் மிட்செல் மார்ஷின் அவுஸ்திரேலியாவை எதிர்த்து தாசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் நேற்றையதினம்(16.02.2026) அபார வெற்றி பெற்றது.
இலங்கை அணியின் தொடக்க வீரர் பதும் நிசங்க 52 பந்துகளில் 100 ரன்கள் குவித்ததன் மூலம் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
27 வயதான அவர் 10 பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இரண்டாவது வேகமான சதம்
குறித்த போட்டியின் பின்னர், பதும் நிசங்க T20 போட்டிகளில் பல சாதனைகளை முறியடித்துள்ளார்.
முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜெயவர்தனவுக்குப் பிறகு, T20 உலகக் கோப்பை வரலாற்றில் இலங்கை அணிக்காக அதிகபட்ச தனிநபர் ஸ்கோரைப் பதிவு செய்த இரண்டாவது இலங்கை வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

ஜெயவர்தன இதற்கு முன்பு 2010இல் சிம்பாப்வேக்கு எதிரான சதத்துடன் இந்த சாதனையைப் படைத்திருந்தார். இந்நிலையில், 2026 இல் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக தனது ஆட்டமிழக்காத சதத்துடன் நிசங்க இந்த சாதனையைப் படைத்துள்ளார்.
இலங்கையர் ஒருவர் T20 போட்டிகளில் அடித்த இரண்டாவது வேகமான சதம் என்ற தனது சொந்த சாதனையையும் நிசங்க சமன் செய்துள்ளார்.
இலங்கை அணிக்காக இரண்டு சதங்கள்
இதற்கு முன்னதாக 2025 ஆம் ஆண்டில், டுபாயில் இந்தியாவுக்கு எதிராக அவர் 52 பந்துகளில் சதம் அடித்திருந்தார்.

2021ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக தனது T20யில் அறிமுகமான நிசங்க, 87 போட்டிகள் மற்றும் 86 இன்னிங்ஸ்களில் விளையாடி, 128.63 ஸ்ட்ரைக் ரேட்டிலும் 31.77 சராசரியிலும் 2,574 ரன்கள் எடுத்துள்ளார்.
இலங்கை அணிக்காக இரண்டு சதங்கள் மற்றும் 18 அரைசதங்களை பதிவு செய்துள்ளார்.
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan