முக்கிய அமைச்சர்களுக்கு நீதிமன்றம் பிறபித்த உத்தரவு
போலி ஆவணங்களை தயாரித்து சொத்துக்களை குத்தகை அடிப்படையில் வழங்கி மோசடியில் அமைச்சர் வசந்த சமரசிங்க, தொழிலாளர் பிரதியமைச்சர் மகிந்த ஜெயசிங்க மற்றும் கடுவெல மேயர் ரஞ்சன் ஜெயலால் ஆகியோரிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்து முக்கிய தகவல்களை தாக்கல் செய்யுமாறு கல்கிசை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
தேசிய தொழிலாளர் நிறுவனத்திற்கு சொந்தமான இரண்டு மாடி கட்டடம் மற்றும் காணியை போலியான பத்திரம் தயாரித்து ரூ. 3.6 மில்லியனுக்கு குத்தகைக்கு விட்டதாக கூறப்படும் மோசடி தொடர்பாகவே இந்த உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றம் உத்தரவு
விசாரணையில் கண்டறிப்பட்ட ஆவணங்களான சான்றளிக்கப்பட்ட பத்திரத்தின் நகல், செப்டம்பர் 3, 2017 அன்று தேசிய தொழிலாளர் காங்கிரஸ் தொழிற்சங்கத்தின் தலைவராக வசந்த சமரசிங்கவுக்கு, உரிமையளிக்கப்பட்ட பொதுக் கூட்டத்தின் அறிக்கை, இல.166,206 மற்றும் 207 ஆகிய குத்தகைப் பத்திரம்,இது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு அறிக்கைகளின் பிரதி ஆகியன கொழும்பு குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.
அதன்படி, வழக்கு ஓகஸ்ட் 22 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.



