தமிழில் தேசிய கீதம் ஒலிக்கும் போது கண்ணீர் விட்ட சம்பந்தன்...
தமிழில் தேசிய கீதம் ஒலிக்கும் போது இரா.சம்பந்தன் கண்ணீர் விட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹுமான் தெரிவித்துள்ளார்.
காலஞ்சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் அனுதாப பிரேரணையில் உரையாற்றும் போதே அவர் இன்று(25) இவ்வாறு தெரிவித்தார்.
தமிழில் தேசிய கீதம்
அவர் மேலும் உரையாற்றுகையில்,
2016 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தின் போது நடந்த சுதந்தர தின நிகழ்வின் இறுதியில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது எதிர்க்கட்சி தலைவராக கலந்து கொண்ட போதே இந்த சம்பவம் நடந்தது.
அவர் வடக்கு -கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்க எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்துள்ளார்.
அந்த கண்ணீரில் நான் கண்டது என்னவென்றால்,இனப்பிரச்சினை தொடர்பில் அவர் கொண்டிருந்த ஆழ்ந்த சிந்தனையும பற்றும் என்னை நிலைகுலைய வைத்தது. தமிழர் பிரச்சினைக்கு தான் இருக்கும் போதே தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதில் தீவிரமாக செயற்பட்டார்.
சிரேஷ்ட தலைவர்
அதற்காக அவர் தென்னிலங்கை பிரதான கட்சி தலைவர்களுடன் பல பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒன்றிணைந்து செயற்பட்ட சந்தர்ப்பங்கள் அநேகம்.
ஆனாலும் சில தென்னிலங்கை கட்சிகள் அல்லது தலைவர்கள் இனப்பிரச்சினையை தீர்க்க முயற்சித்த போது ஏனைய பிரதான தென்னிலங்கை கட்சிகள் அவற்றை எதிர்த்து செயற்பட்டதால் சில சந்தர்ப்பங்கள் கைவிட்டு போயுள்ளன.
அவர் மரணிக்கும் வரை அவர் எதிர்ப்பார்த்திருந்த எந்த தீர்வும் கிடைக்கவில்லை. இறுதில் சமஷ்டியை வலியுறுத்தியும் போராடினார். இவ்வாறான சிரேஷ்ட தலைவர்களை நாம் இலங்கை அரசியலில் காண்பது அரிதானதாகும்” என குறிப்பிட்டார்.



