சிறைச்சாலை ஆணையாளர் விவகாரம்: நீதிமன்றில் அம்பலமாகவுள்ள உண்மைகள்!
நீதிமன்றத்தையே வியப்பில் ஆழ்த்தும் வகையில், சிறைச்சாலை ஆணையாளர் துஷார உபுல்தெனிய தொடர்பான உண்மைகளை நீதிமன்றுக்கு வழங்கவுள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.
சிறைச்சாலை ஆணையாளர் துஷார உபுல்தெனிய இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே அவர் இதனை கூறியுள்ளார்.
குறித்த வழக்கானது இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், எதிர்வரும், ஜூன் 25 ஆம் திகதி வரை உபுல்தெனியவை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறைச்சாலை ஆணையாளர்
இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையாளர் இன்று (11) பிற்பகல் கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி முன் முன்னிலைப்படுத்த நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் சார்பாக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி நவீன் இந்திரதிஸ்ஸ, சந்தேக நபரை பிணையில் செல்ல அனுமதிக்குமாறு கோரியள்ளார்.
இருப்பினும், சட்டமா அதிபர் சார்பாக வழக்குத் தொடர்ந்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் முன்வைத்த சமர்ப்பிப்புகளை பரிசீலித்த நீதிமன்றம், சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற கைதி
சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் அதுல திலகரத்ன என்ற கைதி தற்போது நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக திலீப பீரிஸ் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்னும் முடிவடையவில்லை என்றும், பல ஆண்டுகளாக நடந்து வரும் ஒரு மோசடியை ஒரு சில நாட்களில் முடிவுக்குக் கொண்டு வர முடியாது என்றும் திலீப பீரிஸ்சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் குற்றவாளிகள் மிகவும் நுட்பமானவர்கள் என்பதால், இந்த விசாரணைகளை முடிக்க குறைந்தது இரண்டு வாரங்கள் ஆகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தையே வியப்பில் ஆழ்த்தும் வகையில், இந்த விசாரணைகள் குறித்த உண்மைகளை அடுத்த விசாரணையில் முன்வைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று அவர் கூறியுள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

சன் டிவி சீரியல்களை ஓரங்கட்டி டாப் 5 TRPயில் முன்னேறிய விஜய் டிவி சீரியல்... அதிரடி மாற்றம் Cineulagam

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri

இரண்டு உசுரு எடுத்தாச்சு.. மகிழ்ச்சியில் குணசேகரன் டீம்! ஆனால் தர்ஷன் கொடுத்த ஷாக்.. நாளைய ப்ரோமோ Cineulagam
