பிரபல பாதாள உலகக்குழு உறுப்பினருடன் தொடர்பு! பாதுகாப்புத் தரப்பு உத்தியோகத்தர்கள் குறித்து விசாரணை
கம்பஹா தேவா என்றழைக்கப்படும் பிரபல பாதாள உலகக்கும்பல் உறுப்பினருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய பாதுகாப்புத் தரப்பின் உத்தியோகத்தர்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பிரபல பாதாள உலகக் கும்பல் தலைவர்களில் ஒருவரான கெஹெல்பெத்தர பத்மா என்பவரின் வலது கையாக கம்பஹாவைச் சேர்ந்த பஸ் தேவா என்பவர் செயற்படுகின்றார்.
கெஹெல்பெத்தர பத்மா குழு அண்மையில் மேற்கொண்ட படுகொலைகள் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களுக்கு இவரே ஆட்களை அமர்த்தி குற்றச் செயல்களை மேற்கொள்ள உதவி செய்துள்ளார்.
விசாரணைகள்
தற்போதைக்கு பேலியாகொடை குற்றத் தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்குள் சிக்கியுள்ள பஸ் தேவாவின் தொலைபேசியை பரிசோதித்த போது அதில் விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பின் பலரது தொலைபேசி மற்றும் ஏனைய தொடர்பு விபரங்கள், அவர்களுடனான வட்சப் உரையாடல்கள், குறுஞ்செய்திகள் என்பன கண்டறியப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து குறித்த உத்தியோகத்தர்களுக்கு எதிரான விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



