அநுரவிற்கு சிறீதரன் எம்.பி அனுப்பிய கடிதம்! நாடாளுமன்றில் இரகசிய சந்திப்பு
தமிழ் மக்களின் நீடித்து நிலைத்து போயுள்ள அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்களை பேசுவதற்காக எதிர்வரும் 22ஆம் திகதி ஒத்தி வைப்பு பிரேரணை முழுநாள் விவாதமாக நாடாளுமன்றத்தில் நடைபெற உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த மாதம் 23ஆம் திகதி நாடாளுமன்ற குழுத்தலைவர் என்ற ரீதியில் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கும், சபாநாயகருக்கும் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு மற்றும் நிலஅபகரிப்பு, மனித புதைகுழிகள் தொடர்பான விடயங்கள் பேசுவதற்கான கோரிக்கையை முன்வைத்திருந்தேன்.
சர்வதேச விசாரணை
அதற்கான சந்தர்ப்பம் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை கிடைத்துள்ளது. குறித்த ஒரு நாள் விவாதத்தில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு உள்ளிட்ட மனித புதைகுழிகளுக்கான சர்வதேச விசாரணை, காணிகள் அபகரிப்பு உள்ளிட்ட விடயங்களை வலியுறுத்தவுள்ளோம் என தெரிவித்தார்.
மேலும், மன்னார் காற்றாலை தொடர்பான அமைச்சர் தொடர்பிலான சந்திப்பு மற்றும் அரசியல் கைதிகள் விடுவிப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதியிடம் பேசுவதற்கான சந்தர்ப்பத்தை கேட்டு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



