அமெரிக்காவுக்கு எதிரான இந்தியாவின் அதிரடி நடவடிக்கை : வெளியான தகவல
அமெரிக்காவுடனான ஆயுத கொள்முதல் பேச்சுவார்த்தைகளை நிறுத்தியதாக வெளியான செய்திகளை பொய்யானவை என்று இந்திய மத்திய அரசு மறுத்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சக அதிகாரி கூறுகையில், "அமெரிக்காவிலிருந்து பாதுகாப்பு கொள்முதல் தொடர்பான பேச்சுவார்த்தைகளை இந்தியா நிறுத்தியதாக வெளியான செய்திகள் தவறானவை.
அமெரிக்க விஜயத்தை நிறுத்தி
பல்வேறு கொள்முதல் செயல்முறைகள் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளின்படி நடந்து வருகின்றன என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
The Defence Ministry refuted claims of paused defence procurement talks with the US, calling them false and fabricated. It confirmed that procurement cases are progressing as per standard procedures. #DefenceMinistry #IndiaUS #DefenceProcurement #FakeNews @rajnathsingh… pic.twitter.com/wre1zO8ed7
— The Edge: News & Beyond (@TheEdgeNewsIn) August 8, 2025
முன்னர் அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்களை வாங்கும் செயல்முறையை இந்தியா நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த விவகாரத்தில் பரீட்சயம் கொண்ட 3 இந்திய அதிகாரிகள் இந்த தகவலை தெரிவித்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இந்நிலையில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முன்னதாக திட்டமிட்டிருந்த தனது அமெரிக்க விஜயத்தை நிறுத்தி உள்ளதாகவும் தெரிவிககப்பட்டுள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதால் இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 50 சதவீத வரி விதித்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



