இலங்கையில் மக்கள் மத்தியில் அதிகரிக்கும் ஆபத்து - வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
நாட்டின் பல பகுதிகளில் தற்போது வெப்பமான வானிலை பதிவாகி வரும் நிலையில் மனநோய்க்கு இலக்காகும் ஆபத்து அதிகரித்துள்ளதாக காலி தேசிய மருத்துவமனையின் மனநல மருத்துவரான ரூமி ரூபன் தெரிவித்துள்ளார்.
வெப்பநிலை உயர்வால் மனச்சோர்வு மற்றும் பதட்டம் போன்ற நோய்களும் பதிவாகி வருவதாக அவர் கூறியுள்ளார்.
மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை
இதேவேளை நாட்டின் பல மாவட்டங்களில் இன்றைய தினம் (14.08.2026) மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை அதிகரித்த நிலையில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் கூறியுள்ளது.
வெப்பநிலையின் அளவு
இந்த மாவட்டங்களில் வெப்பநிலை 39 முதல் 45 பாகை செல்சியஸ் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
அதன்படி, கடினமான வெளிப்புறச் செயல்பாடுகளைக் குறைத்துக் கொள்ளவும், போதுமான அளவு தண்ணீர் அருந்தவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வாடகைக்கு வீடு பார்க்க சென்ற தம்பதி: கடித்து குதறிய பிட்புல் நாய்: அதிர்ச்சியூட்டும் காட்சி News Lankasri
விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பார்த்துவிட்டு முதல் விமர்சனம் சொன்ன தெலுங்கு தயாரிப்பாளர்.. படம் எப்படி இருக்கு? Cineulagam