கட்டுநாயக்கவில் ரூ.52 இலட்சம் மதிப்புள்ள சிகரெட் பொதியுடன் சிக்கிய பெண்
சட்டவிரோதமாக சிகரெட் பொதிகளைக் நாட்டிற்குள் கொண்டு வந்த பெண் ஒருவர் இன்று (14.08.2026) விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்த பின்னர், காலை சுமார் 6:15 மணியளவில், அறிவிக்க வேண்டிய விவரங்கள் ஏதுமில்லாத பயணிகளுக்காக ஒதுக்கப்பட்ட 'பசுமை வழித்தடம்'(Green Channel) வழியாகக் கடந்து செல்ல முயன்ற அப்பெண் கைது செய்யப்பட்டார்.
நான்கு பயணப் பைகளில் மறைத்து
கண்டி பகுதியைச் சேர்ந்த 45 வயதான, கைது செய்யப்பட்ட அந்தப் பெண், சவூதி அரேபியாவில் இரண்டு ஆண்டுகள் வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணியாற்றிய பிறகு இலங்கைக்குத் திரும்பியதாகக் கூறப்படுகிறது.

சுங்க அதிகாரிகளின் கூற்றுப்படி, அவர் தனது பணியை முடித்து இலங்கை திரும்புவதற்கு முன்பு ஷார்ஜாவில் சிகரெட் பொதிகளை வாங்கியுள்ளார்.
அந்தப் பெண் எடுத்துச் சென்ற நான்கு பயணப் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 35,200 சிகரெட்டுகள் அடங்கிய 176 அட்டைப் பெட்டிகளை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சிகரெட் பொதிகளின் மதிப்பு சுமார் ரூ.52.8 இலட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
முறையான சுங்கத்துறை விசாரணையைத் தொடர்ந்து, அந்தச் சரக்கு பறிமுதல் செய்யப்பட்டதுடன், குறித்த பெண்ணுக்கு ரூ.100,000 அபராதம் செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் பதிவாகியுள்ள இந்த ஆண்டின் மிக வெப்பமான நாள்: அம்பர் எச்சரிக்கை விடுப்பு News Lankasri