60 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்..! அமைச்சர் பதவி பெண்ணொருவருக்கா..

Vijay Indian National Congress Tamil nadu Tamil Nadu Election 2026 TVK
By Shadhu Shanker May 06, 2026 05:33 PM GMT
Report

தமிழகத்தில் புதிய அரசியல் மாற்றத்திற்கான சூழல் உருவாகியுள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் தலைமையில் அமைக்கப்பட உள்ள அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த ஒரே இடத்தை யார் நிரப்பப்போகிறார்கள் என்பது தற்போது அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 2026 சட்டசபை தேர்தலுக்கு பிறகு, தமிழக அரசியலில் நீண்ட காலமாக நிலவி வந்த திமுக–காங்கிரஸ் கூட்டணி முறிவுக்கு வந்துள்ளது.

தவெகவின் பிரம்மாண்ட வெற்றியின் பின்னணியில் யார்..! விஜயை வழிநடத்திய தனிநபர்

தவெகவின் பிரம்மாண்ட வெற்றியின் பின்னணியில் யார்..! விஜயை வழிநடத்திய தனிநபர்

60 ஆண்டுகளுக்குப் பிறகு 

தமிழக அரசியல் வரலாற்றில் கடந்த பத்து ஆண்டுகளாக நீடித்து வந்த மிக வலுவான ஒரு கூட்டணி இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளது.

இது மாநில அரசியலில் ஒரு முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. இந்த கூட்டணியின் மூலம், சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் ஆளுங்கட்சியின் ஒரு பகுதியாக அமைச்சரவையில் இடம் பெறவுள்ளது.

1967-ஆம் ஆண்டுக்குப் பிறகு திராவிடக் கட்சிகள் ஆட்சி செய்த நிலையில், காங்கிரஸ் உறுப்பினர்கள் அமைச்சரவையில் இடம்பெறாத நிலை தொடர்ந்தது. தற்போது அந்த அரசியல் இடைவெளி முறியடிக்கப்பட உள்ளது.

இந்த நிலையில், காங்கிரஸுக்கு வழங்கப்பட உள்ள அமைச்சர் பதவிக்கான முக்கிய வேட்பாளராக கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் தொகுதியில் வெற்றி பெற்ற எம்எல்ஏ தாரகை கத்பெர்ட் பெயர் வலுவாக பேசப்படுகிறது.

தமிழகத்தின் மாற்றுத்திறனாளி எம்எல்ஏ தமிழக வெற்றிக்கழகத்தில்..! வரலாற்றில் முதன்முறை

தமிழகத்தின் மாற்றுத்திறனாளி எம்எல்ஏ தமிழக வெற்றிக்கழகத்தில்..! வரலாற்றில் முதன்முறை

 தனிப்பெரும் சக்தி

கடற்றொழில் சமூகத்தைச் சேர்ந்த இவர், அதே பகுதியிலிருந்து முன்னாள் பெண் அமைச்சர் லூர்தம்மாள் சைமன் பிறந்ததையும் நினைவூட்டுகிறார்.

தாரகை கத்பெர்ட் அமைச்சராக நியமிக்கப்பட்டால், அது பெண்கள் அரசியலில் முன்னேற்றம் அடைவதற்கான ஒரு முக்கிய அடையாளமாகவும், சமூக நீதி நோக்கில் ஒரு முன்னேற்றமாகவும் பார்க்கப்படுகிறது.

60 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்..! அமைச்சர் பதவி பெண்ணொருவருக்கா.. | Congress In The Tamil Nadu Cabinet After 60 Years

60 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு காங்கிரஸ் பெண் பிரதிநிதி அமைச்சரவையில் இடம்பெறுவது, சமூக நீதி மற்றும் பெண் அதிகாரமளித்தலுக்குச் சான்றாக அமையும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

மேலும், தென் தமிழகத்தில் கடற்றொழில் மக்களின் பிரச்சினைகள் மற்றும் வளர்ச்சி தேவைகளுக்கு அதிக கவனம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தவெக கட்சி இளைஞர்கள் மற்றும் மாற்றத்தை விரும்பும் வாக்காளர்களின் ஆதரவுடன் தனிப்பெரும் சக்தியாக உருவெடுத்துள்ள நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஆதரவு ஆட்சி அமைப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளது.

பெரும்பான்மைக்கான தேடலில் தவெக..! காங்கிரஸிடம் ஆதரவு கேட்ட விஜய் - மேலிடத்தின் இறுதி முடிவு

பெரும்பான்மைக்கான தேடலில் தவெக..! காங்கிரஸிடம் ஆதரவு கேட்ட விஜய் - மேலிடத்தின் இறுதி முடிவு

புதிய தொடக்கம்

இதுகுறித்து காங்கிரஸ் தரப்பில், “மக்களின் தீர்ப்பு மதச்சார்பற்ற ஆட்சியை நோக்கியது. அந்தப் பொறுப்பை உணர்ந்து தவெக அரசுக்கு நாங்கள் ஆதரவு வழங்குகிறோம். இது ஒரு புதிய தொடக்கம்,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

60 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்..! அமைச்சர் பதவி பெண்ணொருவருக்கா.. | Congress In The Tamil Nadu Cabinet After 60 Years

மொத்தத்தில், ஒரு காலத்தில் தமிழகத்தை ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி மீண்டும் அமைச்சரவையில் இடம் பெறும் சூழல் உருவாகியுள்ளதால், அக்கட்சியின் தொண்டர்களிடையே உற்சாகம் அதிகரித்துள்ளது.

குறிப்பாக, தாரகை கத்பெர்ட் அமைச்சராக அறிவிக்கப்பட்டால், அது அரசியல் மட்டுமின்றி சமூக ரீதியிலும் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பரபரப்பை ஏற்படுத்திய தேர்தல் முடிவுகள்! தமிழ்நாட்டின் 16ஆவது சட்டப்பேரவை கலைக்கப்பட்டதாக அறிவிப்பு

பரபரப்பை ஏற்படுத்திய தேர்தல் முடிவுகள்! தமிழ்நாட்டின் 16ஆவது சட்டப்பேரவை கலைக்கப்பட்டதாக அறிவிப்பு

you may like this..


1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
நன்றி நவிலல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US