பெரும்பான்மைக்கான தேடலில் தவெக..! காங்கிரஸிடம் ஆதரவு கேட்ட விஜய் - மேலிடத்தின் இறுதி முடிவு
தமிழ்நாட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் எந்த கட்சிக்கும் பெரும்பாண்மை கிடைக்காததால் பலத்த எதிர்ப்பார்ப்பு நிலவுகின்றது.
தமிழக சட்டசபை தேர்தலில் த.வெ.க. 108 இடங்களிலும், தி.மு.க. கூட்டணி 73 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
முக்கிய கலந்துரையாடல்
அதாவது, 118 தொகுதிகள் வேண்டும். த.வெ.க. தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்பதால், அதில் திருச்சி கிழக்கு தொகுதியை அவர் பதவி விலகுவார் என கூறப்படுகின்றது.
மேலும், பெரும்பான்மை வாக்கெடுப்பை நடத்த த.வெ.க.வில் இருந்து ஒருவர் தற்காலிக சபாநாயகராக இருக்க நேரிடும் என்பதால், அவரால் ஓட்டுபோட முடியாது.

எனவே, த.வெ.க. ஆட்சியமைக்க இன்னும் 12 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இந்தநிலையில் தவெக தலைவர் விஜய் காங்கிரஸ் கட்சியிடம் ஆதரவு கேட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அதன்படி தவெகவிற்கு, காங்கிரஸ் கட்சி ஆதரவு வழங்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உள்பட 5 மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் தொடர்பாக டெல்லியில் இன்று(5) காங்கிரஸ் மேலிட தலைவர்கள் முக்கிய கலந்துரையாடலை நடத்தினர்.
இந்திய அரசியல் களத்தையே அதிர வைத்திருக்கும் அதிசயத் தேர்தல்! தவெக தலைவர் விஜய் சற்றுமுன்னர் வெளியிட்ட பதிவு
காங்கிரஸிடம் ஆதரவு
இந்த கலந்துரையாடலில் தமிழக சட்டசபை தேர்தல் நிலவரம் பற்றியும், தேர்தலுக்கு பிந்தைய சூழல் பற்றியும் விவாதிக்கப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலிற்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் (அமைப்பு) பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, தவெக தலைவர் விஜய் தமிழகத்தில் ஆட்சியமைக்க காங்கிரஸிடம் ஆதரவு கேட்டுள்ளார்.
தமிழக மக்கள் மதசார்பற்ற அரசு அமைப்பதற்கே வாய்ப்பு வழங்கி உள்ளதை காங்கிரஸ் புரிந்து கொள்கிறது.
பாஜக மற்றும் அதன் கைப்பாவைகளை தமிழகத்தை வழிநடத்தஅனுமதிக்க கூடாது என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருக்கிறது.
காமராஜரிடம் இருந்து உத்வேகம் பெற்றுள்ளது பற்றி விஜய் பேசி உள்ளார். தமிழகத்தில் மக்கள் அளித்த தீர்ப்பு மற்றம் மாநிலத்தின் உணர்வை கருத்தில் கொண்டு காங்கிரஸ் மேலிடம் இறுதி முடிவு எடுக்க உள்ளது'' என குநிப்பிட்டுள்ளார்.
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri