கொழும்பில் வெள்ளத்தில் சிக்கிய தாயையும் பிள்ளைகளையும் காப்பாற்றிய இளைஞர்கள்
கொழும்பின் பல பகுதிகளில் நேற்று இரவு வெள்ளத்தில் மூழ்கியபோது இடம்பெற்ற மனிதாபிமான செயல் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.
வெள்ளத்தில் சிக்கிய காரில் இருந்து தாயையும் இரு குழந்தைகளையும் வெளியே எடுத்து உயிரைக் காப்பாற்றிய இளைஞர் குழுவினரை பலரும் பாராட்டியுள்ளனர்.
சிறிய மகளுடனும் மகனுடனும் பயணத்தை மேற்கொண்ட தாய் ஒருவரின் கார், இந்த வீதியோர வெள்ளத்தில் சிக்கி நடுவீதியில் செயலிழந்து நின்றது.
அடைமழையில் இளைஞர்களின் மனிதாபிமானம்
பிள்ளைகளுடன் அந்தத் தாய் நிர்க்கதியாக நிற்பதைக் கண்ட, அவ்வழியாகச் சென்ற சில இளைஞர்கள், காரை வெள்ளத்திலிருந்து வெளியே தள்ளி, அந்தத் தாய்க்கும் இரு பிள்ளைகளுக்கு உதவி செய்துள்ளனர்.

இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் பெயர்கள் அல்லது முழு விவரங்கள் சரியாக தெரியவில்லை என்றாலும், புகைப்படத்துடன் கூடிய தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
கொழும்பு மற்றும் அதனை சூழவுள்ள பகுதியில் நேற்று மாலை பெய்த அடைமழை காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்ததுடன், சுமார் மூன்று மணித்தியாலத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.